பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/648

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632

பன்னிரு திருமுறை வரலாறு


மனத்தகத்தான் தலைமேலான் வாக்கினுள்ளான்

வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர் இனத்தகத்தான் இமையவர் தஞ் சிரத்தின் மேலான்

ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பெ ற் புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள் ளான்

பொருப்பிடையான் தெருப்பிடையான் காற்றினுள்ளான் கனத்தகத்தான் கயிலாயத் துச்சியுள் ளான்

காளத்தியா னவனென் கண்ணுளானே.

எனவருந் திருத்தாண்டகத்தில் தி ரு ந வுக் க ர சர் தெளிவாகப் புலப்படுத்தருளினமை காணலாம். இவ்வாறு ஒரு திருப்பதியில் தங்கி இறைவனை இறைஞ் சுங்கால் அதனையொத்த ஏனைத்திருப்பதியும் நினைவுக்குவர அவ்விரண்டினையும் சேர்த்துப் பாடிப்போற்றும் வழக்க முண்டென்பது, திருப்புன் கூரும் திரு நீடுரும் ஆகிய இருதலங்களையும் பற்றித் திருநாவுக்கரசர் பாடிய திருத் தாண்டகத்தாலும், திருப்புகலியும் திருவிழிமிழலையும், திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும், திருநள்ளாறும் திருவாலவாயும் என இரண்டிாண்டு தலங்களைப்போற்றித் திருஞானசம்பந்தப் பிள்ளையார் பாடிய திருப்பதிகங் களாலும் இனிது புலகிைன்றது. இவ்வழக்கத்தை யொட்டியே கயிலைபாதி காளத்திபாதியந்தாதி யென்னும் இப்பிரபந்தமும் தோன்றியிருத்தல்வேண்டும். தென்னுட் டிலுள்ள திருக்காளத்தி மலையினை அடைந்து அங்கெழுந் தருளியுள்ள அம்மையப்பரை வணங்கிப்போற்றிய நக்கீர தேவரது உள்ளத்தில், திருநாவுக்கரசடிகளார் திருவுள் ளத் திற்ருேன்றியவாறு வடதிசையிலுள்ள கயிலைமலையைப் பற்றிய எண்ணமுண்டாக, அவ்வெண்ணத்தால் திருக் கயிலையைப்பற்றி யொரு பகுதியும் அம்மலையை நினைக்கத் தூண்டிய திருக்காளத்தியைப்பற்றி மற்ருெரு பகுதியுமாக கயிலைபாதி காளத்தி பாதியந்தாதி யென்னும் இப்பனுவலைப் பாடிப் போற்றினரெனக் கருதுதல் பொருந்தும்.

இறைவனது திருவருளின் திறத்தை நினைந்துருகிய நக்கீர தேவர், இறைவனுடைய அருட்கோலங்களையும் திருவருட் செயல்களையும் அவனை வழிபடுவதன் இன்றியமை யாமையினையும் விரித்துணர்த்தும் நிலையிற் பாடிய பாடல் களும், தம் நெஞ்சத்திற்கு அறிவுறுத்தும் நிலையிற்பாடிய பாடல்களும், இறைவனை நோக்கி உரையாடும் நிலையிற்