பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/685

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 6.6%

காளத்தி போற்றி கயிலைமலை போற்றியென

நீளத்தில்ை நினைந்து நிற்பார்கள் - தாளத்தோ

டெத்திசையும் பன் முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப

அத்தனடி சேர்வார்க ளாங்கு ' என இந்நூல் முடிவுபெறுதலை நோக்குங்கால் இந்நூலின் ஆசிரியராகிய நக்கீர தேவர் திருக்காளத்தியை அடைந்து கண்ணப்ப நாயனரால் வழிபாடு செய்யப்பெற்ற சிவ பெருமானைப் பணிந்து போற்றும் நிலையில் போற்றித் திருக்கலிவெண்பா வென் னும் இந்நூலைப் பாடியிருத்தல் வேண்டுமென்பது புலனுகும்.

திருமுருகாற்றுப்படை

தன்னிகரற்ற தலைவைெருவன்பால் பரிசில் பெற்று வரும் கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலிய பரிசில் வாணர்கள் வழியிடையே தம்மை யெதிர்ப்பட்ட இரவலர் களது துயர் கண்டிரங்கித் தாம் பெற்ற பெருஞ் செல்வத்தை அவர்களும் பெற்று மகிழும்படி வழிகூறியனுப்புதல் ஆற்றுப்படை யெனப்படும். ஆற்றுப்படை யென்பதற்கு வழிப்படுத்தல் என்பது பொருள். வரையாது வழங்கும் வள்ள லொருவனை யடைந்து வளம் பெற்ற வாழ்க்கை நிலை யெய்திய பரிசிலர் கள், தாம் பெற்ற பெருவளத்தை ஏனையோரும் பெற்று இன்புறுமாறு வழிகூறியனுப்புத லாகிய இப்பேருதவியை,

  • கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

ஆற்றிடைக் காட்சி புறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெருஅர்க் கறிவுறிஇச் சென்றுபயனெதிரச் சொன்ன பக்கமும் " எனப் புறத்திணையியலிற் பாடாண்டிணைத் துறைகளுள் ஒன்ருகக் குறிப்பிடுவர் தொல்காப்பியர்ை. ஆடுதற் ருெழிலில் வல்ல கூத்தரும், பண்ணுெடு பாடுதலில் வல்ல பாணரும், பிறர் மனத்துக் கொண்டதனைக் குறிப்பால் அறிந்து இசைபட நடித்துக் காட்டவல்ல பொருநரும், மனக் குறிப்பு மெய்க்கண் புலப்பட ஆடவல்ல விறலியும் என்னும் நால்வகையோரும் தமது செல்வப் பொலிவும் தம் மெதிர்ப்பட்ட பரிசிலர் களது வறுமைத் தோற்றமும் ஒன்றினென்று மாறுபட்டுத் தோன்ற, வழியிடையே சந்தித்தபொழுது, தமக்கு இத்தகைய பெருஞ் செல்வத்தை