பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670

பன்னிரு திருமுறை வரலாறு


வழங்கியவர் இன்னரெனவும் அவரை யடைந்து பரிசில் பெறுதற்குரிய வழிமுறைகள் இவையெனவும் தம்மை யெதிர்ப்பட்ட பரிசிலர் க்கு அறிவுறுத்தி, அன்னேர் தாம் கூறிய நெறியே சென்று பரிசில்பெற வழிசொல்லி அனுப் பிய பகுதி ஆற்றுப்படை யென்னுந் துறையாம் என்பது மேற்காட்டிய தொல்காப்பியத் தொடரின் பொருளாகும். இத்தொடரிற் கூறிய இலக்கணத்தின்படி அமைந்த ஆற்றுப்படைகளாவன கூத்தராற்றுப்படை, பாணுற்றுப் படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை யென் பனவாம். இவற்றுக்குரிய இலக்கியங்களாகப் பத்துப் பாட்டில் பொருநராற்றுப்படை, சிறுபா ணுற்றுப்படை, பெரும்பாளுற்றுப்படை, மல்ே படுகடா மென்னுங் கூத்த ராற்றுப்படை ஆகிய பாடல்களையும் புறநானூறறில் விறலி யாற்றுப்படையென்ற துறையிலமைந்த பாடல் களையும் கொள்ளலாம்.

வாழ்க்கைத் துறையில் வளம்பெற்ருேர், தம்போல் வளம்பெருதாரை நோக்கி, வளம்பெற்று வாழ் தற்கேற்ற வழிமுறைகளைத் தெரிவிப்பதே ஆற்றுப்படை யென்னும் இப்புறத்துறையின் நோக்கமாகும். யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்றெண்ணிப் பரந்தவுள் ளத்துடன் ஒருவர்க் கொருவர் தத்தம் அநுபவங்களை எடுத்துரைத்து வையத்து வாழ்வாங்கு வாழ வழிகாட்டியுதவும் இத் தெய்வ அருட்குறிப்பினை,

ஆற்றிடைக் காட்சியுறழத் தோன்றிப்

பெற்ற பெருவளம் பெரு அர்க் கறிவுறீஇச்

சென்று பயனெதிரச் சொன்ன பக்கம் என வருந் தொடரால் ஆசிரியர் தொல்காப்பியனுர் இனிது விளக்கியுள்ளார். இத்தொடர்ப் பொருளை ஊன்றி நோக்குங்கால் இங்குக் கிளந்தோதப் பெற்ற கூத்தர், பாணர், பொருநர், விறலி யென்னும் இவர்களே யன்றி இவர்களைப்போன்று ஏனேக் கலைத்துறைகளிற் பயிற்சி யுடைய பிறரும் தம் எதிர்ப்பட்ட மக்களை மேன் மேலுயரச் செய்தல் வேண்டுமென்னும் அருள் நோக்குடன் நல் வழியிற் செலுத்துதற்குரிய ரென்பதும், இங்ங்ணம் வெவ் வேறு கலைத்துறைகளில் வல்ல சான்றேர் பலரும் தத்தம் பயிற்சி நிலையையும் வாழ்க்கை அனுபவத்தையும் எடுத்துரைத்துத் தம்மையொத்த மக்களை நல்வழிப்படுத்து