பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/696

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

680

பன்னிரு திருமுறை வரலாறு


இருபிறப்பாளராகிய அந்தணர்கள் நீராடி ஈர ஆடை உடுத்து ஆறெழுத்து மந்திரமாகிய மறையைஒதி மலர் தூவி வணங்க அவ்வழிபாட்டை விரும்பியேற்று ஏரகம் என்னுந் திருப்பதியில் எழுந்தருளியிருத்தலும் உரியன். அதுவன்றி, குறமகளிராடுங் குரவைக் கூத்துக்கு முதற்கை கொடுத்து அம்மகளிருடன் மலைகள் தோறும் விரும்பி விளை யாடுதலும் அவன் பால் நிலைபெற்ற அருட்குணமாகும். அதுவேயுமன்றி, ஊர்கள்தோறும் மக்கள் கொண்டாடுந் திருவிழாக்களிலும் அன்புடைய அடியார்கள் உளமுருகிப் போற்ற அமைந்த இடங்களிலும் முருக பூசை புரியும் வேலனென்தான் வேலேந்தி வெறியாடுகளத்திலும் காடு களிலும் இளமரச் சோலைகளிலும் ஆற்றிடைக் குறையிலும் குளங்களிலும் வேறுபல எழில் மிக்க இடங்களிலும் பல தெருக்கள் ஒன்று கூடும் சந்திகளிலும் புதுப்பூ மலருங் கடம்ப மரங்களிலும் மன்றங்களிலும் பொதுவாகிய அம்ப லங்களிலும் தெய்வம் உறையுந் துண்கள் நிலைபெற்ற இடங்களிலும் குறையிரந்து வேண்டும் அன்பர்கள் தாம் விரும்பியவாறே பெற்று நின்று வழிபட அவ்வவ்விடங் களிலே நிலைபெற எழுந்தருளியிருத்தலும் திருவருட் பெரி யோர் அறிந்து கூறிய மெய்ந்நெறியாகும். யான் முற் கூறிய அவ்வவ்விடங்களிலேயாயினுமாக, அல்லது பிற இடங்களிலேயாயினுமாக, நீ முற்பட அம் முருகப் பெரு மானைக் கண்டபொழுது முகம் விரும்பித் துதித்துக் கைகளைத் தலைமேற் குவித்து நின்று வாழ்த்திப் பின்பு அவன் திருவடிகளிலே தலைபொருந்தும்படி வீழ்ந்து வணங்கி,

1 நெடும் பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை

ஐவருள் ஒருவன் அங்கை யேற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால் வரை மலேமகள் மகனே காற்ருேர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ இழையணி சிறப்பிற் பழையோள் குழவி"

என்பன முதலாக யான் அறிந்து நினக்குக் கூறிய அள வாலே நீயும் நினக்குத் தெரிந்த பலவற்றையும் கூறிப் புகழ்ந்து, ' நின்ளுேடு ஒப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தை யுடைய பெருமானே, நின்தன்மையெல்லாம் முழுதும் அளந்தறிதல் நிலைபெற்ற எவ்வுயிர்க்கும் அரிதாகை