பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீர தேவ நாயஞர் 679

பெருமான், தன்னைச் சேர்ந்தவர்களது தீவினையைப் போக்கி அவரைத் தாங்கிய ஆற்றல் மிக்க திருவடி யினையும் அழித்தற்குரியகொடியோரை அழித்த கையினை யும் உடையவன். அறக்கற்பினையுடைய தெய்வயானை யார் கணவன். செங்கடம்பின் மாலையசையும் மார்பினை யுடையவன். வண்டுகள் மொய்க்காத தெய்வத் தன்மை வாய்ந்த செங்காந்தட் பூவாலாகிய கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவன். கடல் நடுவிற் புகுந்து சூர பன்மாவாகிய தலைவனைக் கொன்ற சுடர்விடும் நெடிய வேலாலே, அவுணரது நல்ல வன்மை யெல்லாம் அழியும்படி கீழ் நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தைப் பிளந்த குற்றமில்லாத வெற்றியினை யும், ஒருவராலும் அளந்தறிய வொண்ணு பொருள் சேர் புகழினையும் உடையவன். சிவந்த வேற் படையைத் தாங்கிய சேயோனகிய முருகப்பெருமானுடைய திருவடியிற் செல்லுதற் குக் காரணமான நல் வினைகளைப் பல பிறப்புக் களினும் விரும்பிப் புரிந்த தலைமை பெற்ற உள்ளத்துடனே அப்பெருமான் பாற் செல்லுதற்கு நீ விரும்பி விட்டாயாயின் நினது நல்ல நெஞ்சத்தினது இனிய விருப்பம் ஈடேற நீ கருதிய வீடுபேற்றின்பத்தை இப்பொழுதே தப்பாமற் பெறுவாய். வெற்றியாலும் செல்வத்தாலும் விளக்கமுற்ற கூடல் நகரத்துக்கு மேற்றிசையிலுள்ளதும், இரவெல்லாம் தாமரை மலரில் உறங்கிய வண்டினங்கள் விடியற் காலத்தே நெய்தற் பூவை யூதி ஞாயிறு தோன்றின காலத்தே கண்ணைப் போன்று மலர்ந்த சுனைப்பூக்களிலே சென்று ஆரவாரிக்கும் வளமார்ந்ததுமாகிய திருப்பரங்குன்றத்திலே இறைவனகிய முருகன் மனம் விரும்பி எழுந்தருளியிருத்த லும் உரியன். அதுவன்றி, ஆறு திருமுகங்களும் பன்னி ரண்டு திருக்கரங்களும் தத் தமக்கேற்ற தொழில் செய்ய யானை யின் மேலெழுந்தருளி வான்வழியாகத் திருச் சீரலை வாய் என்ற திருப்பதியையடைதலும் அவனுக்கு நிலை பெற்ற பண்பாகும். அதுவன்றிப் படைத்தற் கடவுளாகிய நான்முகனுக்கேற்பட்ட சாபத்தை நீக்குதற் பொருட்டுத் திருமால் சிவபெருமான் இந்திரன் ஆகிய தெய்வங்களும் முப்பத்துமுக்கோடி தேவர்களும் பதினெண்கணங்களும் துனியில் காட்சி முனிவர் முற்புகக் கந்தருவர் யாழிசைக்க உடன் வந்து காணத் திருவாவி நன்குடியில் தன் தேவி யுடன் சில நாள் அமர்ந்திருத்தலும் உரியன். அதுவன்றி