பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

698

பன்னிரு திருமுறை வரலாறு


வாழ்ந்தவரென்றும் அந்நாட்டுத் திருத்தலங்களுள் ஒன் ருகிய கானப்பேரென்னும் திருப்பதியிலே அளவிலாப்பற்றுடையவரென்றும் கருதுதல் பொருத்த முடையதாகும்.

7. கபில தேவ நாயனர் இவர் பாடிய நூல்கள் மூத்த நாயனர் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவ பெருமான் திருவந்தாதி என்பன. இம்மூன்று பிரபந்தங் களும் பதினொாந் திரு முறையில் முறையே 20,21,22-ஆம்

பிரபந்தங்களாகச் சேர்க்கப் பெற்றுள்ளன.

இவற்றுள் மூத்த நாயனர் திருவிரட்டை மணிமாலை யென்பது அன்பில்ை வழிபடும் அடியார்களது இடர் தீர்த்தருள் புரிதல் வேண்டிச் சிவபெருமானல் தோற்று விக்கப் பெற்ற யானை முகப் பெருமானுகிய மூத்த பிள்ளை யாரைப் போற்றிப் பரவும் பனுவலாகும். மூத்த நாயனு ரென்பது மூத்த பிள்ளையாராகிய விநாயகர் க்குரிய பெய ராகும். வெண்பாவும் கட்டளைக் கலித்துறையும் அடுத் தடுத்துத் தொடுத்துவர இருபது செய்யுட்களால் அந் தாதித் தொடையாக அமைந்த இப்பிரபந்தம், இருவகை மணிகளாற் நோக்கப்பெற்ற மாலை போன்று விளங்குவ தாதலின் இரட்டை மணிமாலை யென்னும் பெயர்த்தாயிற்று.

யானைமுகக் கடவுளாகிய விநாயகப் பெருமான் தன்னை அன்பினல் வழிபடு மியல் புடைய மெய்யடியார்களுக்கு இவ்வுலகில் வேண்டும் செல்வங்களை மேன் மேல் உள வாகச் செய்தும் அவர்கள் தொடங்கிய நற்செயல்களை இடையூறின்றி இனிது நிறைவேற்றியும் நலம் பெருகிய சொல்வன் மையும் பெருமைக்குரிய நற்பண்புகளும் பெருகச் செய்தும் அழகு பெற வாழ்விக்க வல்ல அருளாளனுகத் திகழ்வோணுதலின் அப்பெருமான வானுலகத்தவராகிய

தேவர்களும் காதலாற் கைகுவித்து வணங்குவர் என் பதனை,

1. நாயனர் என்ற சொல் வழிபடத்தக்க இறைவன் என்ற பொருளில் வழங்குவதாகும் சிராப்பள்ளி மேவிய நாயனரென

நம் வினை நாசமே." (திருநாவுக்கரசர் தேவாரம்) என வருதல் காண்க,