பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கபில தேவ நாயஞர் 699

திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானேரும் ஆன முகத்தானைக் காதலாற் கூப்புவர் தங் கை. என இவ்விரட்டை மணிமாலையின் முதற் பாடலில் ஆசிரியர் அறிவுறுத்துகின்ருர்

விநாயகப் பெருமானை வாயாரப் போற்றி உளங் குளிர்ந்து வழிபடும் அடியார்கள் சிந்தையின் நிறைவாகிய செல்வத்தைப் பெற்றவர்களாதலின் அவர்கள்பால் செல் வத்திற்குத் தெய்வமாகிய திருமகள் விரும்பி யுறைவாள் எனவும் அங்ங்னம் வழிபடாதார் மனத்தில் திருமகள் கணப்பொழுதும் தங்கியிருக்க மாட்டாளெனவும் அறி வுறுத்துவது,

நல்லார் பழிப்பி லெழிற்செம் பவளத்தை நாண நின்ற பொல்லா முகத்தெங்கள் போதகமேபுர மூன்றெரித்த வில்லா னளித்த விநாயக னேயென்று மெய்ம்மகிழ வல்லார் மனத்தன் றி மாட்டா ளிருக்க மலர்த்திருவே. எனவரும் இப்பிரபந்தத்தின் இறுதிச் செய்யுளாகும். இவ் வாறே இத்திருவிரட்டை மணிமாலையிலுள்ள செய்யுட்கள் யாவும் விநாயகப் பெருமானை வழிபடுதலா லுளவாம் பெரும் பயன்களை விரித்துரைப்பனவாக அமைந்துள்ளன.

பத்துப் பாட்டும் எட்டுத் தொகையுமாகிய பழைய சங்க நூல்களிற் சிவபெருமானுக்குரிய மகளுராகப் போற்றப்பெறுந் தெய்வம் குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகப் பெருமானேயாவர். யானே முகப் பெருமானுகிய விநாயகரது வழிபாடு சங்க நூல்களிற் கூறப்படவில்லை. விநாயகர் வழிபாடாகிய இது கி. பி. ஏழாம் நூற்ருண்டின் தொடக்கத்திலே தமிழ் நாட்டில் இடம் பெற்றிருத்தல் வேண்டுமென்பது வரலாற்ருராய்ச்சியாளர் துணியாகும். எனவே மூத்த பிள்ளை யார் திருவிரட்டை மணிமாலை யென்னும் இப்பிரபந்தம் கி. பி. ஏழாம் நூற்ருண்டிற்குப் பிற்படடதென்பது நன்கு பெறப்படும். இப்பிரபந்தம் கி.பி. ஒன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த நக்கீர தேவர் கல்லாட தேவர் என்ற பெருமக்கள் பாடிய பிரபந்தங்களை யடுத்துப் பதினெராந் திருமுறையில் முறைப்படுத்தப் பெற்றிருத் தலையும் கி. பி பத்தாம் நூற்ருண்டில் வாழ்ந்த இளம்பூரண அடிகள் இவ்விரட்டை மணிமாலையிலுள்ள கனிய நினை