பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708

பன்னிரு திருமுறை வரலாறு


வாங்கி வினைமலமறுத்து வான்கருணை தந்தானை

எனவும் வரும் திருவாசகத் தொடர்ப் பொருளை விரித் துரைக்கும் நிலையில் அமைந்திருத்தல் காணலாம்.

இனி, கடைச் சங்கப் புலவராகிய பரணரும் பதிளுெ ராந் திருமுறையாசிரியராகிய இப் பரண தேவ நாயனரும் ஒருவரேயெனக் கருதுவாருமுளர். மேலெடுத்துக் காட்டிய குறிப்புக்களால் திருமூலர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்பியாரூரர், திருவாதவூரடிகள் ஆகிய பெருமக்களுக்குக் காலத்தாற் பிற்பட்டவர் பதினுெராந் திருமுறையாசிரியராகிய பரணதேவ நாயனரென்பது இனிது புலனுதலானும், இவர் பாடிய சிவபெருமான் திருவந்தாதியில் வடசொற்களும் பிற்காலச் சொல் வழக்குகளும் காணப்படுதலானும் இவர் சங்கப் புலவராகிய பரணரல்லரென்றும் அவர் பெயர் தாங்கிக் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டில் வாழ்ந்த சிவநெறிச்செல்வ சென்றும் கொள்ளுதலே எற்புடையதாகும்.

9. இளம்பெருமானடிகள்

பதினெராந் திருமுறையாசிரியர்களுள் இளம் பெருமா னடிகளும் ஒருவராவர். இவர் பாடிய பனுவல் சிவபெரு மான் திருமும்மணிக்கோ வையென்பதாகும். பெருமானடி கள் என்பது இறைவனைக் குறித்து வழங்கும் பெயராகும். ' வரியமறையார்' என்னும் முதற் குறிப்புடைய திருக்கட. வூர்த் தேவாரத் திருப்பதிகத்திற் பாடல்தோறும் அவ ரெம்பெருமானடிகளே எனத் திருஞானசம்பந்தப் பிள்ளை யார் சிவபெருமானைப் போற்றியுள்ளார். என்றும் இளமை குன்ரு இறைவனுகச் சிவபெருமான் பெற்றருளிய முருகப் பெருமானை இளம்பூரணன் என்ற திருப்பெயராற் சான் ருேர் போற்றிப் பரவக் காண்கின்ருேம். இளமை குன்ரு இறைவன் என்ற இப்பொருளிலேயே இளம் பெருமா னடிகள் என்ற பெயரும் முருகக் கடவுளுக்கு வழங்கப் பெற்றிருத்தல் கூடும். கடவுட் பெயரை மக்களுக்கு இட் டழைக்கும் வழக்கப்படி இளம்பெருமானடிகள் என்ற பெயர் பெற்றேரால் இவ்வாசிரியர்க்கு இடப்பட்டதெனக் கொள்ளுதல் பொருந்தும். இனி, பெருமானடிகள் என் னும் பெயருடையார் இருவராக அவர்களுள் இவர் இளைய வர் என்பது தோன்ற இளம்பெருமானடிகள் என இவ்