பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருமான்டிகள் f{}}

வாசிரியர் அழைக்கப்பெற்ருரெனக் கருதுதற்கும் இட முண்டு. இவ்வாசிரியர் பிறந்த நாடு, ஊர், குலம் முதலி யன இவையெனத் தெரிந்து கொள்ளுதற்குரிய சான்றுகள் கிடைக்கவில்லை. இவர் பாடிய திருமும்மணிக்கோவை திருவெண்காட்டடிகள் அதிராவடிகள் ஆகிய பெருமக்கள் பனுவல்களுக்கு முன்னே தொகுக்கப்பெற்றிருத்தலால் இவர் வாழ்ந்த காலம் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டின் இறுதியும் பத்தாம் நூற்ருண்டின் தொடக்கமுமாமெனக் கூறுதல் பொருந்தும்.

அகவல், வெண்பா, கட்டளேக்கலித்துறையாகிய மும் மணிகளால் இயன்றதாய்ச் சிவபெருமானுக்கு அணியும் அழகிய மணிவடமாகத் திகழ்வதாகலின் இவர் பாடிய பனுவல் திருமும்மணிக்கோவையென்னும் பெயர்த்தா யிற்று. இந்நூல் முப்பது பாடல்களையுடையது ; பதினெ ராந்திருமுறையில் இருபத்து நான்காம் பிரபந்தமாக வரிசைப்படுத்தப் பெற்றுள்ளது. இதன்கணுள்ள பாடல் கள் யாவும் சொற்செறிவும் பொருட்செறிவுமுடையன வாய்த் திகழ்கின்றன. நிரம்பிய இலக்கியப் பயிற்சியுடை யார்க்கே இப்பாடல்களின் பொருள் இனிது விளங்கும். இறைவனை முன்னிலைப்படுத்து உரையாடி மகிழும் நிலையிற் பாடிய பாடல்களும் இறைவனைக் கண்டு காமுற்ற தலைவி யினது துயர் கிளந்துரைக்கும் அகத்துறைப் பாடல்களும் இம்மும்மணிக் கோவையில் இடம் பெற்றுள்ளன.

படைத்தலாகிய முதற்ருெழிலையுடைய நான்முகன் இயற்றிய கொடுங்கையொடு திகழும் மாடம்போல்வதாகிய இந்நிலப்பரப்பிலே நிறுவிய தெய்வத்தன்மை வாய்ந்த தகழியினுள்ளிடத்தே செந்நிற மேகம் பொழிந்த மழை வெள்ளமெனத்தக்க பேரளவிற்ருகிய நெய்யினை நிரப்பித் தேவருலகளவும் ஓங்கியொளிர ஏற்றியதும், முத்தின் குளிர்ச்சியையுடையதாய்த் திகழ்வதும், பெருமலைகளைப் பெயர்த்தெறிவதாகிய கடுங்காற்று வீசினும் சிறிதும் நடுக்கமுருது சுடர்விட்டொளிர்வதுமாகிய பேரொளி விளக்கினைப்போன்று அண்டத்தின் புறத்திலும் அன்பருள்

1. சுடர்விட்டுளன் எங்கள் சோதி என ஆளுடைய பிள்ளை யாரும், சுடர்க்கொழுந்தைத் துளக்கிலா விளக்கை என ஆளு டைய அரசும் இறைவனைச் சுடர் விளக்காகப் போற்றிய தொடர்கள் இவண் ஒப்பு நோக்கத் தக்கனவாம்.