பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 719

பெறுக எனச் சிவசருமர்க்குக்கூறி அவருடன் காவிரிப்பூம் பட்டினத்தை அடைந்து திருவெண்காடரிடம் விலையாகக் கொடுக்கப் பெற்றுச் சிவசருமர்க்குப் பெரும் பொருளைத் தரும்படி செய்தருளினர். பொருளைப் பெற்று மகிழ்ந்த சிவசருமர் இடைமருதின அடைந்து திருமணஞ் செய்து கொண்டு சிவபூசையினைத் தவருது செய்து வந்தார்.

திருவெண்காடர் தம் புதல்வனெனப் பேரன்புடன் பேணிப் போற்ற வளர்ந்த மருதவாணர், வாணிகத் துறையில் வல்லவராய்ப் பெரும் பொருளிட்டித் தம் தந்தையை மகிழ்வித்தார். வணிகர் சிலருடன் கடல் கடந்து சென்று வணிகம் புரிந்து வரும் நாட்களில் மருதவாணர் தாம் ஈட்டிய பொருளைத் திருக்கோயிற் பணிக்கும் சிவனடியார்களுக்கும் செலவிட்டார். எஞ்சிய பொருளைக்கொண்டு எருமுட்டைகளை நிறைய வாங்கிக் கொண்டு உடன்வந்த வணிகருடன் ஊர்க்குத் திரும்பினர். வரும் வழியில் அவர்கள் ஏறிய கப்பல் திசைமாறிப் போயிற்று. உடன் வந்த வணிகர்கள் உணவு சமைத்தற்கு விறகின்றி மருதவாணர் கொணர்ந்த எரு முட்டைகளைக் கடளுகக் கேட்டுப் பெற்றனர். ஊர் சென்றவுடன் அவற் றுக்கு ஈடு தருவதாக உறுதிச் சீட்டும் எழுதிக் கொடுத் தார்கள். சில நாளில் அவர்களெல்லோரும் காவிரிப் பூம்பட்டினத்தை அடைந்தார்கள். மருதவாணர் தாம் கொணர்ந்த எருமுட்டைகளை இல்லத்திற் கொண்டு சேர்த் தார். அவருடன் வந்த வணிகர் சிலர் திருவெண்காடரை யடைந்து மருதவாணர் வீணே பொருளைச் செலவிட்டுப் பித்தரானர் எனத் தெரிவித்தார்கள். மருதவாணர் கொணர்ந்த வரட்டிகளுள் ஒன்றைத் திருவெண்காடர் சோதித்தபொழுது அதனுள்ளே மாணிக்க மணியிருத்தலைக் கண்டு வியந்தார். அஃதுணர்ந்த வணிகர்கள் தாம் கட் ளுகப் பெற்ற எருமுட்டைகளின் விலை மதிப்பினை யெண் னிக் கவலையுற்ருர்கள். அவர்கள் சென்றபின் திருவெண் காடர் எல்லா வரட்டிகளையும் சோதித்துப் பார்த்தார். அவற்றுளொன்றிலேனும் மாணிக்க மணிகளில்லாமை தெரிந்து வருத்தமுற்ருர். இவ்வாறு பிழைபட நடந்த மருதவாணரை தண் டிக்குங் கருத்துடன் தனியறையி னுள்ளே பூட்டி வைக்கச் செய்தார். திருவெண்காடரது மனைவியார் தமது வளர்ப்புப் புதல்வராகிய மருதவாணரைக்