பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726

பன்னிரு திருமுறை வரலாறு


அடிகளைக் களவுப் பொருளுடன் கண்ட அரசனுகிய பத்திர கிரி மன்னன் அவரைக் கழுவேற்றுமாறு கட்டளையிட்ட னன். காவலர் அடிகளைக் கழுமரத்தின் முன்னே கொண்டு நிறுத்தினர். அடிகள் தம் முன்னேயுள்ள கழுமரத்தைப் பார்த்து என் செயலாவது யாதொன்றுமில்லை' என்ற பாடலைப் பாடினர். கழுமரம் தீப்பற்றி யெரிந்தது. அதனை யுணர்ந்த பத்திரகிரி மன்னன் தன் பிழையைப் பொறுத் தருள வேண்டி அடிகளைப் பணிந்தான். தனது அரசியலைத் துறந்து அடிகளுக்கு மாணவனுயினன். அடிகள் தம் மாளுக்கராகிய பத்திரகிரியாரைத் திருவிடைமருதூர்க்குச் செல்லப் பணித்துத் தாம் பல தலங்களை வணங்கச் சென்றனர். தென்னுடடைந்த திருவெண்காட்டடிகள் திருவிடைமருதூரை யடைந்தார். அங்கு வந்த பத்திர கிரியாரை மேலைக்கோபுரவாயிலில் இருக்கப் பணித்துத் தாம் கீழைக் கோபுரவாயிலில் அமர்ந்திருந்தார். பத்திர கிரியார் நாடோறும் பிச்சை யேற்று வந்து தம் ஆசிரி யர்க்கு அருத்திய பின் தாம் உண்டு எஞ்சியதைப் பசியால் வருந்தி அங்கிருந்த பெண் நாய்க்கு இட்டார். அன்று முதல் அந் நாய் அவரைப் பிரியாதிருந்தது. ஒரு நாள் சிவபெருமான் சித்தராக வந்து தாம் பசியால் வருந்துவ தாக்ப் பட்டினத்தடிகளிடம் கூறினர். அது கேட்ட அடிகள் 'யான் கந்தையும் மிகையென்ற எண்ணமுடை யேன். என்பால் ஒன்றுமில்லை. மேலைக்கோபுரவாயிலில் ஒரு குடும்பியுள்ளான். அவன் உமது பசியைத் தீர்ப்பான்' என் ருர், சித்தரும் அவர் சொல்லிய மொழியினை மேலைக் கோபுர வாயிலிலிருந்த பத்திரகிரியாரிடம் சொல்லி நின் ருர். அம்மொழியினைக் கேட்ட பத்திரகிரியார் இரந் துண் ணும் ஒடும் எச்சிலுண்ணும் நாயுமா என்னைக் குடும்பி யாக்கி விட்டன " என்று வருந்தித் தம் கையிலுள்ள ஒட்டைக் கீழே யெறிந்தார். அவ்வோடு சிதைந்து நாயின் மேற்பட, நாய் இறந்து போயிற்று. அடியார்களது சேடத்தை யுண் டமையால் அந்நாய் காசியரசனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்தது. மங்கைப் பருவமெய்திய பெண் தன் பழம் பிறப்புணர்ச்சியால் தாய் தந்தையருடன் திருவிடை மருதூரை அடைந்து பத்திரகிரியாரைப் பணிந்து நின்று அடி நாய் மீண்டும் திருவடிப்பேற்றுக்கே வந்தது' என்று கூறினுள் பத் திரிகிரியார் அப்பெண்ணை பழைத்து வந்து பட்டினத்தடிகள் திருமுன்னர் நின்று