பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவெண்காட்டடிகள் 727

எம்பெருமான் எச்சிலுண்ட நாய்க்கும் இப்பிறவி வரலாமோ என வருந்தி முறையிட்டார். அடிகளும் சிவன் செயலுக்கு என் செய்யலாம் என இறைவனைச் சிந்தித்தார். அப்பொழுது ஒரு பெருஞ் சோதி தோன்றி யது. அச் சோதியில் இறைவன் ஆணையின்படி பத்திர கிரியார் அப்பெண்ணுடன் சென்று மறைந்தனர். சிவபிரா னது பெருங் கருணைத்திறத்தை நினைந்துருகிய பட்டினத் தடிகள் இன்னும் என்னையும் என் வினை யையும் இங்கு இருத்திவைத்தனை போலும் என இரங்கிக் கூறினர். அந் நிலையில் ஒற்றியூர்க்கு வா’ என ஒர் அசரீரிஉண்டாயது. பின்பு அடிகள் திருவெண்காடு சென்று சேந்தனுரைச் சிறைமீட்டருளிச் சீகாழி, தில்லை, அண்ணுமலை, காஞ்சி முதலிய தலங்களைப்பணிந்து போற்றித் திருவொற்றியூரை அடைந்து இறைவனையிறைஞ்சி வரும் நாளில் ஒருநாள் கடற்கரையில் இடைச்சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் மணலில் மறைந்து சிவலிங்கமாய் முளைத்தனர். பட்டினத்தடிகளைக்குறித்து அறிஞர்பலரும் எழுதிவரும் வரலாறு இதுவேயாகும்.

மேற்குறித்தவற்றுட் காணப்படாத செய்திகள் சில புலவர் புராணத்தில் பட்டினத்தடிகள் வரலாற்றில் இடம் பெற்றுள் ளன. சிவபெருமானே மருதப்பிரானுக வந்து உபதேசித்தும் திருவெண்காடர் உலகப்பற்ருெழியவில்லை யென்றும், அவருடைய நண்பராகவும் தையற்ருெழிலில் வல்லவராகவும் விளங்கிய வயது முதிர்ந்த பாணரொருவர், தாம் இறக்குங்கால் தம் கையிலுள்ள காதற்றவூசிகளை எல் லாங்கொட்டி, போங்கால் இவை கூட வாரா என்ருெரு சீட்டெழுதிவைத்து எல்லாவற்றையுஞ் சேர்த்து முடிந்து தம் மனைவி கையில் தந்து , இம்முடிச்சினை வெண்காடரிடம் கொடுப்பாயாக என்றுசொல்லி இறந்தாரென்றும், அதனைப் பெற்ற திருவெண்காடர் உலக நிலையாமையை யுணர்ந்து துறவடைந்தார் என்றும் புலவர் புராணமுடையார் கூறுகின்ருர். இச்செய்தி பட்டினத்தடிகள் புராணத்தி லும் தொழுவூர் வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்கள் எழுதிய திருவெண்காட்டடிகள் சரித்திரத்தி லும் காணப்படவில்லை. பட்டினத்தடிகள் தமக்கு முத்திப் பேறு எங்கு நிகழும் என ஐயுற்றுவருந்தியபோது சிவ பெருமான் அடிகளிடம் பேய்க்கரும்பொன்றைத்தந்து இது