பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பீ 769

பொல்லாப்பிள்ளையாரை வழிபடு கடவுளாகக் கொண்டு சிவநெறி பரப்பிய திருவருட் செல்வர் நம்பியாண்டார் நம்பியென்பது நன்கு புலளும்.

(உ) கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம்

சிவநெறிச் செல்வர்களாற் கோயில் எனச் சிறப் பித்துப் போற்றப்பெறும் பெரும்பற்றப்புலியூராகிய தில்லைச் சிற்றம்பலத்திலே எழுந்தருளியுள்ள கூத்தப்பெருமானைப் போற்றும் கட்டளைக்கலித்துறையாகிய திருவிருத்தங்களால் இயன்ற பனுவலாதலின் இது கோயிற் றிருப்பண்ணியர் விருத்தம் என யாப்பினுற் பெயர் பெறுவதாயிற்று. பண் ணுேடியன்ற பாடல் என்ற பொருளிற் பண்ணியல் விருத்த மென்பது, லகரத்திற்கு ரகரம் போலியாய்ப் பண்ணியர் விருத்தமென் ருகித் திருப்பண்ணியர் விருத்தமென வழங் கப் பெற்றதெனக் கொளளுதல் பொருந்தும், கட்டளைக் கலித்துறையைத் திருவிருத்தமென வழங்கும் வழக்கம் உண்மை திருநாவுக்கரசர் அருளிய திருவிருத்தமாகிய திருப்பதிகங்களின் பெயராலும் நம்மாழ்வார் அருளிய திரு விருத்தம் என்ற பிரபந்தத்தின் பெயராலும் இனிது புலனும். இனி, கோயில் திருப்பண்ணியர் ' என்ற தொடர்க்குத் தில்லைப் பெருங்கோயிலில் எழுந்தருளி யிருந்து உயிர்களுக்குத் திருத்தகவிற்ருகிய இன்னருளைப் புரிவார் ' எனப் பொருள் கொண்டு, பாட்டுடைத் தலைவ கிைய இறைவன் பெயரால் கோயிற்றிருப்பண்ணியர் விருத்தமென இந்நூல் பெயரெய்தியதெனக் கொள்ளினும் அமையும். அந்தாதியாகவமைந்த இப்பிரபந்தம், எழுபது கட்டளைக்கலித்துறைகளையுடையதாகும். திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார் அறிவுறுத்தியபடி தில்லைப் பெருங் கோயிலையடைந்து தேவாரத் திருமுறைகளைக் காண விரும்பிய நம்பியாண்டார் நம்பிகள் இப்பனுவலைப் பாடித் தில்லைச்சிற்றம்பலவனையிறைஞ்சிப் போற்றிஞர் என்பது வரலாறு.

முற்காலத்திலே தேவர்கள் உய்யும் வண்ணம் ஆலகால நஞ்சினையுண்டு மிடற்றிலடக்கிய பெரி யோனே, தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தியற்றி நின்ற செம்பவளம்போலும் நிறமமைந்த திருமேனியையுடைய சிவபெருமானே, எனதுள்ளத்திலுள்ள வஞ்சனை முதலிய

49