பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770

பன்னிரு திருமுறை வரலாறு


குற்றங்களை நீக்கி நெஞ்சத்தை நினது திருவடிக்கீழ் நிலை பெறவைத்து மலர் போலுங் கண் களில் கண்ணிர் ததும்ப நின்னை வணங்கிப் போற்றினேனல் லேன். ஒரு சிறிதும் தகுதிபெருத எளியேனையும் நீ ஆட்கொண்டருளி ய்ை. நினது திருவருட்கு யான் என்ன தகுதியுடையேன் என என்னைக் கண்ட பிறரெல்லாம் நின்னைக் கடிந்துரைப்ப ரல்லரோ எனத் தில்லைப்பெருமான நோக்கி நம்பியாண் டார் நம்பிகள் உளமுருகிப் போற்றுவதாக அமைந்தது,

நெஞ்சந் திருவடிக் கீழ்வைத்து நீண்மலர்க் கண் பனிப்ப வஞ்சங் கடிந்துன்னே வந்தித்திலேன் அன்று வான ருய்ய நஞ்சங் கருந்து பெருந்தவையேதல்ல தில்லைநின்ற அஞ் செம் பவளவன ளு அருட்கியானினி யாரென்பரே. எனவரும் இப்பிரபந்தத்தின் முதல் திருவிருத்தமாகும்.

இறைவன் உயிர்களது பிறவி நோயைக் களைதற் பொருட்டே தில்லைச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தியற்று கின்ருன். எவ்வுயிர்க்குத் தாயுந் தந்தையுமாகிய அவ் விறைவனது திருவடியே அடியேற்குத் தலைமறை நன்னிழ லாவது. காளத்திமலையில் தன்னை வழிபட்ட வேடுவராகிய கண்ணப்பர்க்குவேண்டும் வரமருளிப் பொருவில் அன்புருவ மாகிய தெய்வத் தன்மையை வழங்கிய பேரருளாளன் அவ்விறைவனுவன். பொன்னம்பலத்துறை புண் ணியன கிய அவனுக்குப் பண்டைப் பறைச் சேந்தன் அன்பிளுல் அளித்த பழைய சோறும் திருவமுதாயிற்று. அம்பலவான கிைய அவனருளால் நம்பியாரூரராகிய சுந்தரரும் கழறிற் றறிவாராகிய சேரமான் பெருமாளும் முறையே வெள்ளை யானை மீதும் குதிரை மீதும் அமர்ந்து மக்கள் யாக்கை யோடு திருக்கயிலையையடைந்து இன்புற்ருர்கள். கல்லா லெறிந்த சாக்கியனுர்க்கும் இறைவன் எதிர் தோன்றி இன்னருள் புரிந்தான். கண்ணப்பர் அன்பினுற் படைத்த இறைச்சியையும் அதிபத்தரென்பார் விடுத்த மீனையும் இழிததொதுக்கத்தக்கன எனவெண்ணுது ஏற்றுக்கொண்ட மையால் உயிர்கள் செய்யும் பழிக்கத்தக்க செயல்களையும் இகழாத பண்புடையான் இறைவன் என்பது புலம்ை. தன்னை வழிபடுவாரனை வர்க்கும் மீளாவழியாகிய பேரின் பத்தை வழங்கவேண்டிச் சிவபெருமான் மன் ருடவும் சில ஊமர்கள் அவ்விறைவன் திருவருளில் நாட்டமின்றிப் பிறப்பிறப்பில் வீழ்ந்து தடுமாறுதல் அந்தோ இரங்கத்