பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/792

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

776

பன்னிரு திருமுறை வரலாறு


நுகர்தற்குரிய போகமும் விலங்கினின்று மக்களப்பிரித்து உயர்த்தும் கல்வியும் அக்கல்விப் பயனலுளதாகும் துற வுள்ளமும் துறவிலைடைதற்குரிய பேராவியற்கையெனப் படும் வீடுபேறும் ஆகிய எல்லா நலங்களையும் திருஞான சம்பந்தப் பிள்ளையாருடைய திருநாமங்கள் ஒருங்கே தருவன எனத் தெளிந்து நம்பியாண்டார் நம்பிகள் ஆளுடைய பிள்ளையாரை வழிபட்டு வந்தனரென்பது,

உறவும் பொருளுமொண் போகமுங் கல்வியுங் கல்வியுற்ற துறவும் துறவிப்பயனும் எனக்குச் சுழிந்தபுனற் புறவும் பொழிலும் பொழில்சூழ் பொதும்பும் ததும்ப வண்டின் நறவும் பொழிலெழிற் காழியர் கோன் திருநாமங்களே, எனவரும் அவரது வாய்மொழியால் நன்கு தெளியப்படும்.

தம் நெஞ்சத்திலே திருஞானசம்பந்தப் பெருமான் குருவாகத்தோன் றியருள்புரிந்த செய்தியினை,

  • பொருளென என்னைத்தன் பொற் கழல் காட்டிப்

புகுந்தெனக்கிங்

கருளிய சீர்த்திரு ஞானசம்பந்தன் என்ற தொடரால் நம்பியாண்டார் நம்பி குறிப்பிட்டுள்ளார். உமையம்மையாரளித்த ஞானப்பாலைப்பருகித் திருநெறிய தமிழால் யாவரும் சிவபெருமானது திருவருளையுணர்ந்து இன்புறுதற்குரிய பதிகப்பெருவழியினைத் தோற்றுவித் தருளிய திறத்தால் தமிழ்மக்களுக்கு ஞானக்கண் ணுகவும் சாதிசமய வேற்றுமையின்றி யாவரும் இறைவனடி சேர்ந்து இன்புறு தற்குரிய உயர்ந்த உண்மைகளை அருளிச் செய்யும் அருட்பண்பினுல் விரிந்த உள்ளத்தினராகவும் உலகமக்களனைவரும் உளமுவந்து போற்றும் உயர்ந்த குண நலங்களைப் பெற்றுவிளங்கிய திருவருட் செல்வர் ஆளுடையபிள்ளை யாராதலின் அப்பெருந்தகையாரை,

பதிகப் பெருவழிகாட்டப் பருப்பதக்கோன்பயந்த

மதியத்திருதுதல் பங்கன் அருள்பெறவைத்த எங்கள் நிதி

எனவும்,

தீந்தமிழோர் கண்ணெனவோங்குங் கவுணியர் தீபன் எனவும்,

குறுமனமுன் கலவாத் தமிழாகரன் எனவும்,

‘உலகம் பரசுங் குணந்திகழ் ஞானசம்பந்தன்