பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/798

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ts: பூன்னிரு திருமுறை அசலாது

என்ற பாடலாகும். கலைபயில் நாவினனுகிய கவுணியர் தலைவனே, நினது பேரொளி திகழுந் திருமார்பிற் பூசப் பெற்று விளங்கும் திருவருள் வண்ணமாகிய திருநீறறினை ப் பெற விழைந்து நின்னை வந்திறைஞ்சிய இளமகளிர்களின் கைகளிலணியப்பெற்ற வெள்ளிய வளையல்களை வாங்கிக் கொண்டு அவற்றிற்கு ஈடாகச் செம்பொன்னைத் தருதலால், மலைமகள் புதல்வகிைய நீ வினவு தெரியாத பிள்ளைமைப் பருவத்தினனென்பது, நின்னை ஏமாற்றிச் செம்பொன்னைப் பெற்ற அம்மகளிர்க்கேயன்றி, அன்னேர் பெற்ற பொன் னின் மிகுதியால் பிறரெல்லார்க்குந் தெளிவாகத் தெரிந்து விட்டதே' என்பது இப்பாடலின் பொருளாகும். இதன் கண் ஞானசம்பந்தப் பிள்ளையாரைக்கண்டு காமுற்ற மகளிர் அப்பெருமானது திருமேனிப் பேரழகில் உள்ளத்தைப் பறிகொடுத்தமையால் கைவளைகள் கழல உடலிளேத்து நிறம் வேறுபட்டு வருந்து மியல்பினைக்கூறக் கருதிய நற்ருய், அம்மகளிர் செயலை அவர்களாற் காதலிக்கப்பெற்ற பிள்ளையார் மேலேற்றிக் கவுணியர் தலைவனுகிய நீ மகளிர் கைவளைகளை வாங்கிக்கொண்டு செம்பொன்னைத் தரு கின்ருய் ' எனக்கூறியது, தன்ம்கள் ஒரு குற்றமுமறியாள் எனச்சாதிக்கும் தாயுள்ளத்தை நன்கு புலப்படுத்துதல் காண்க. 'வாணிகம் புரிவோர் சங்க வளையல்களுக்கு ஈடாகப் பொன்னைக்கொடுத்து ஏமாறமாட்டார்கள். பாலரு வாயனுகிய நீயோ பேதையர் கைவளைகளுக்கு ஈடாகப் பொன்னைக் கொடுத்து ஏமாந்தன. இவ்வாறு நீ ஏமாந்த செய்தி ஏனையோர்க்குந் தெரிந்துவிட்டதே ' என நற்ருய் ஞானசம்பந்தப்பெருமானை நோக்கி நகைச்சுவைபெற வுரையாடியதாக நம்பியாண்டார் நம்பி இப்பாடலிற் புலப் படுத்திய திறம் நினைந்து மகிழத்தக்கதாகும்.

(7) ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

திருஞானசம்பந்தப் பிள்ளையார், பேதை முதல் பேரினம் பெண் ஈருகவுள்ள ஏழு பருவத்து மகளிரும் காதல் கூர்ந்து தளர்வுறச் சீகாழிப் பதியிலே திருவுலாப் போந்தருளிய இயல்பினை விரித்துரைத்துப் போற்றுவது இப்பிரபந்தமாதலின் ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலை யென்னும் பெயர்த்தாயிற்று. உலாப் பிரபந்தத்திற் குரிய மரபின்படி கலிவெண்பாவில்ை அமைந்த இப்