பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/799

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி 783

பிரபந்தம் ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை யென மாலை யென்ற பெயரால் வழங்கப்பெற்றமை கூர்ந்து நோக்கத்தக்கதாகும் உலாப் பிரபந்தங்களிற் பாட்டுடைத் தலைவனது இயல்பு பேசப்படுதலேயன்றி அத்தலைவனைக் கண்டு காதலித்து மயங்கிய பேதை முதல் பேரிளம் பெண் ஈருகவுள்ள ஏழு பருவத்து மகளிர் செய்திகளும் தனித் தனியே விரித்துரைக்கப்படுதல் மரபு. பாட்டுடைத் தலைவ னியல்பினையும் அவனைக்கண்டு காமுற்ற எழுவகைப் பருவத்து மகளிர் செய்திகளையும் ஒப்ப விரித்துரைப்பன வாகிய உலாப் பிரபந்தங்கன் திருக்கயிலாய ஞான வுலா, திருவாரூருலா எனப் பாட்டுடைத் தலைவனது ஊரொடு சார்த்தி வழங்கப்பெறுதலும், விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா எனப் பாடுடைத் தலைவன் பேரொடு சார்த்தி வழங்கப் பெறுதலுமாகிய இருதிறத்தன வாகக் காணப்படுகின்றன.

ஆளுடை பிள்ளையார் திருவுலாமாலை யெனும் இப் பிரபந்தத்திற் பாட்டுடைத் தலைவராகிய ஆளுடை பிள்ளை யாரது இயல்பே பெருக விரித்துரைக்கப் பெற்றுளது. பிள்ளையாரைக் காதலித்த எழுவகைப் பருவத்து மகளிர் செய்திகளும் உலாக்களில் வரும் குழாங்கள் என்ற அளவிற் பொதுவகையிற் கூறப்பட்டதன் றிப் பேதை முதலிய ஏழு பகுதிகளாகத் தனித்தனியே வகுத்துக் கூறப்பட வில்லை. எழுவகைப் பருவத்து மகளிரும் காமுற்று வருந்தத் திருஞானசம்பந்தப் பிள்ளையார் திருவுலாப் போந்தருளினுர் என்னும் ஒரு பொருளையே கருதிய இயல் புடையது இப்பிரபந்தமாதலின், ஏனைய உலாக்களைப் போன்று உலாவென்னும் பெயரால் வழங்கப்பெருது, உலா மாலை யென வழங்கப் பெறுவதாயிற்று. இங்ங்ணம் ஒரு பொருளையே கருதிக் கூறிய செய்யுள், இயல்பு என்னும் பொருளுடைய மாலை யென்ற பெயரால் வழங்கப்படுதலுண் டென்பது, சிலப்பதிகாரத்திலுள்ள துன்பமாலை, வஞ்சின மாலை யென்ற பெயர் வழக்கத்தால் நன்கு துணியப்படும்.

ஆளுடைய பிள்ளையார் திருவுலா மாலையாகிய கலி வெண்பா 143 கண்ணிகளையுடையதாகும். சீகாழிப்பதியின் 1. @ఉ58ఇమిr பாட்டுப் பத்தினித் தன்மைத்தாகிய ஒரு பொருளையே கருதிக் கூறிய இயலடை யுடைத்தாகலின் மாலை யென் ருர்" என்பர் அடியார்க்கு நல்லார். சிலப், பதிக, 80)