பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/801

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பியாண்டார் நம்பி 785

இதன்கண் திருஞானசம்பந்தப் பிள்ளையார் விருந் தென்னும் வனப்பமையப்பாடிய திருவிராகம், திருவிருக்குக் குறள், திருப்பாசுரம், பல்பெயர்ப்பத்து. யாழ்முரி, சக்கர மாற்று, ஈரடி முக்கால் முதலிய யாப்புவிகற்பங்களே,

" எப்பொழுதும் நீக்கரிய இன்பத்திராகம் இருக் குக்குறள் நோக்கரிய பாசுரம் பல்பத்தோடும்-ஆக்கரிய யாழ்முரி சக்கரமாற் றீரடி முக்காலும் பாழிமையாற் பாரகத்தோர் தாமுய்ய-ஊழி உரைப் பமரும் பல்புகழால் ஓங்க வுமைகோனைத் திருப்பதிகம் பாட வல்ல சேயை "

எனவரும் தொடரால் நம்பியாண்டார் நம்பி எடுத் துரைத்துப் போற்றினமை உணர்ந்து மகிழத்தக்கதாகும்.

(8) ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்

கலம்பகம் என்பது தமிழிலுள்ள பிரபந்தவகைகளுள் ஒன்று. புயம், தவம், வண்டு, அம்மனை, பாண், மதங்கு, கைக்கிளை, சித்து, ஊசல், களி, மடக்கு, ஊர், மறம், காலம், தழை, இரங்கல், சம்பிரதம், கார், என்னும் இப் பதினெட் டுறுப்புக்களையும் பெற்று வருவது கலம்பகம் என்னும் பிரபந்தமாகும். இதன் முதற்கண் ஒருபோகு, வெண்பா, கலித் துறை யென னும் இம்மூன்றும் முதலுறுப் பாய் வருமெனவும், இவற்றின்பின் ஆசிரிய விருத்தம், ஆசிரியப்பா, வஞ்சித்துறை, வஞ்சி விருத்தம், வெண்டுறை, வெண்பா, மருட்பா, கலித்தாழிசை, கலித்துறை, கலி விருத்தம் என்ற பாக்கள் ஏற்றவாறு வருமெனவும் வெண் பாப் பாடியலுடையார் கலம்பகத்தின் இலக்கணத்தினை விரித்துரைப்பர். இப்பிரபந்தத்திலுள்ள பாடல்கள் அந் தாதியாகத் தொடுக்கப்பெற்று இறுதிப் பாடலின் இறுதி முதற் பாடலின் முதற் சொல்லுடன் மண்டலித்து முடிதல் வேண்டுமென்பது விதி.

இப்பொழுது கிடைத்துள்ள கலம்பகங்களுள் தெள்ளா றெறிந்த நந்திவர்மனென்னும் பல்லவ மன்னனைப் பாட்டுடைத் தலைவனுகக் கொண்டு புலவரொருவர் பாடிய நந்திக் கலம்பகமே காலத்தால் முற்பட்டத்ாகும். அதனை யடுத்துப் பழமையுடையதாக எண்ணத்தகுவது பதினெ

50