பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 பன்னிரு திருமுறை வரலாது

எனவும் ஆளுடை பிள்ளையாரை நம்பியாண்டார் நம்பிகள் உளமுருகிப் போற்றுதலைக் கூர்ந்து நோக்குங்கால், பிள் ஆள யார்பால் இவர்க்கிருந்த ஈடுபாடு நன்கு புலனுகும். இட பக்கொடியினையுடைய சிவபெருமாளுெருவனையன்றிப் பிற ரெவரையும் தெய்வமாப் பேணுத தெளிவுடையார் திரு ஞானசம்பந்தராதலின் கொடிநீடு விடையுடைய பெரு மானை யடிபரவு குணமேதை என இந்நூலாசிரியர் அவரைப் பாராட்டிப் போற்றியுள்ளார். "வம்பருவரி வண்டுமண நாறமலரும், மதுமலர் நற்கொன்றையான் அடியலாற்பேணு. எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடி யேன்" எனத் திருத்தொண்டத் தொகையில் நம்பியாரூரர் ஆளுடைய பிள்ளையாரைப் போற்றிய குறிப்பு இவண் நினைக்கத்தகுவதாகும்.

இக் கலம்பகத்திலுள்ள ஆசிரிய விருத்தங்கள் பல திருவெண்காட்டடிகள் பாடிய கோயில் நான்மணிமாலையி லுள்ள சந்தப்பாடல்களை அடியொற்றியனவாய் இயலிசைத் திறங்களிற் சிறந்து திகழ்கின்றன.

(9) ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை

இப்பனுவல் திருஞானசம்பந்தப் பிள்ளையார் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துரைப்பதாதலின் ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை யென்னும் பெயர்த்தாயிற்று. சிவனடியார்களாகிய திருத்தொண்டர்களைத் தொகுத் துரைத்துப் போற்றுங்கருத்துடன் நம்பியாரூர் பாடிய திருப்பதிகம் திருத்தொண்டத்தொகை என வழங்கப் பெறுதல் போன்று ஆளுடையபிள்ளையார் வரலாற்று நிகழ்ச்சிகளைத் தொகுத்துக் கூறுவதாகிய இப்பிரபந்தமும் திருத்தொகையென வழங்கப்பெற்றதெனக் கருதுதல் பொருந்தும். கலிவெண்பாவாகிய இப்பனுவல் அறுபத்து ஐந்தடிகளால் இயன்றதாகும்.

திருஞானசம்பந்தப் பிள்ளையார், சிவனருளால் உமை யம்மையாரளித்த திருமுலைப்பாலைப் பருகி, ஊழிமுதல்வ கிைய இறைவனைப் பிரமாபுரமேவிய பெம்மான் இவ என்றே யெனத் தம் தந்தையார்க்குச் சுட்டிக்காட்டியது முதல் திருநல்லூர்ப் பெருமணத்தில் நிகழ்ந்த தமது திருமணத்தில் தம் வாழ்க்கைத் துணைவியாருடனும் திரு