பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் நாயஞர் வரலாறு 797

திளைத்தனர். தில்லை வாழந்தணர்கள் திருத்தொண்டர் புராணத்தைச் சிவனெனவே கருதிச் சிவமூல மந்திரத் தால் அருச்சனை செய்து இறைஞ்சினர்கள். சோழ மன்னன், திருத்தொண்டர் புராணத்தை யானை மீது ஏற்றிச் சேக்கிழார் பெருமானையும் அதன் மீது எழுந் தருளச் செய்து, தானும் அவர்பின் ஏறியமர்ந்து தன்னுடைய இரண்டு கைகளாலும் வெண்சாமரை வீசு வானகி, இறைவனது திருவருளே நினைந்து இதுவன் ருே நான் செய்த தவப்பயன்' என்று கூறி உளமுருகினன். யானை திருவீதியை வலம் வந்து பொன்னம்பலத்தின் முன்னே வந்து நின்றது. அடியார் பலரும் சேக்கிழாரைச் சூழ்ந்து போற்றி நின் ருர்கள். அரசரோடு யானையி லிருந்து இறங்கிய அருண் மொழித்தேவர் கனகசபையிலே சென்று திருத்தொண்டர் புராணத் திருமுறையை முன்னே வைத்தார். மன்னர் பெருமான் சேக்கிழார் பெருமானுக்குத் தொண்டர்சீர் பரவுவார் என்ற திருப்பெயர் சூட்டி இறைஞ் சிப் போற்றினன். அங்கு வந்திருந்த அன்பரெல்லோரும் தொண்டர்சீர் பரவுவாரை உளமுருகித் தொழுது போற்றி ஞர்கள். அநபாய சோழன் திருத்தொண்டர் புராணத் தைச் செப்பேட்டிலெழுதி முன்னுள்ள பதினுெரு திரு முறைகளுடன் சேர்த்துச் சிறப்புச் செய்தனன். ஆகவே இத் திருத்தொண்டர் புராணம் பன்னிரண்டாம் திரு முறையெனப் போற்றப் பெறுவதாயிற்று.

பின்பு, அநபாய சோழன் அங்கிருந்தவர்களை நோக்கி இத் தொண்டர் சீர்பரவுவாருடைய தம்பியார் பாலருவாயர் இப்பொழுது எங்கேயுள்ளார் என வினவிஞன். அங் கிருந்தவர்கள். பாலருவாயர் குன்றத் துரிலே திருக்குளம் அமைத்தபின் அங்குத் திருநாகேச்சுரப் பெருமானுக்குத் திருத்தொண்டு செய்து கொண்டிருக்கிருர்’ என மறுமொழி பகர்ந்தனர். அதனைக் கேட்ட அரசர் பெருமான், பாலரு வாயரை அழைத்துவரச் செய்து அவருக்குத் தொண்டை மான் என்ற பட்டமும் சூட்டித் தனக்குரிய அமைச்சராக அமைத்துக்கொண்டான். அங்ங்னம் அமைச்சர் பதவி பெற்ற பாலருவாயர், தொண்டை நாட்டில் பெரும் பஞ்ச மொன்று வந்தபொழுது உளங்கலங்காமல் அங்குள்ள மக்களுக்கு வேண்டும் வசதிகளைச் செய்து பசிப்பிணி நீக்கிய அருஞ்செயலால் தொண்டை மண்டலம் நின்று