பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 பன்னிரு திருமுறை வரலாறு

வளர்த்தற்குரிய தெய்வங் கொள்கையாகிய சிவநெறியும், இவற்றுக்கு உறுதுணையாய் மக்களது அறிவினை வளப் படுத்தும் தமிழ் மொழியும் சிறந்து விளங்கவேண்டும் என்னும் உயர்ந்த குறிக்கோளுடையவர். இக்குறிக் கோளுடன் தமிழ் நாட்டிற் பிறந்து தெய்வமுண்டென்னுந் தெளிவுடையராய்ச் செயற்கருஞ் செயல் பல புரிந்து சிவனருளில் திளைத்த திருவருட் செல்வர்களாகிய திருத் தொண்டர்களின் வரலாறுகளை விரித்து விளக்கும் முறையில் பெரிய புராணமாகிய இக்காப்பியத்தை இயற்றி யுள்ளார். இக் கா ப் பி யம் பத்திச் சுவை நலம் ஊற்றெடுத்துப் பெருகும் ஆராத பேரன்பினே விளக்கும் இலக்கியமாகத் திகழ்கின்றது. அம்பலவர் அருள் மொழியை முதலாகக் கொண்டு தொடங்கப் பெற்ற இந்நூல், திசையனைத்தின் பெருமையெலாம் தென்றிசையே வென்றேறவும், அசைவில் செழுந்தமிழ் வழக்கே அயல் வழக்கின் துறைவெல்லவும், தமிழ் மொழியிலே இசை முழுதும் மெய்யறிவும் இடங்கொள்ளும் நிலை பெருகவும் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் தமிழர் சமுதாயத்திற்கும் ஆக்கந்தரும் முறையில் அமைந்துளது.

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நால் வ ை நன்னெறிகளையும் மேற்கொண்டொழுகி, நிலை பெற்ற பேரன்பின் திறத்தால் எல்லாம் வல்ல சிவபரம் பொருளைச் சிந்தையிற் கொண்டு போற்றி, அம்முதல் வனது திருவருளுக்குரியராகிய அடியார்களே வழிபட்டு, மகவெனப் பல்லுயிரனை த்தையும் ஒக்கப் பார்க்கும் திருவருட் பண்புடையராய்த் தத்தமக்கேற்ற திருத் தொண்டுகளைப் புரிந்து சிவனடி சேர்ந்தவர்கள் திருத் தொண்டர்களாவர். ஐம்புல வழியடைத்த செம்புலச் செல்வர்களாகிய இத் திருத்தொண்டர்களின் திருப் பெயர்களை எடுத்துரைத்துப் போற்றும் முறையில் அமைந்தது, நம்பியாரூரர் அருளிய திருத்தொண்டத் தொகை என்னும் திருப்பதிகமாகும். திருவாரூர்ப் பெருமான், தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் என அடியெடுத்துக் கொடுக்க, நம்பியாரூர ராகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் இத்திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றிஞர் என்பது வரலாறு. இப்பதிகத்தில்