பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/847

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 333

செயற்கரிய செய்வார் பெரியர், சிறியச் செயற்கரிய செய்கலாதான் (26)

என வரும் திருக்குறள், மக்கட் குலத்தாருள் பெரியர் எனப் போற்றத்தக்கார் இவ்வியல்பினர், சிறியர் என விலகி யொழுகத்தக்கார் இவ்வியல்பினர் என வகுத்துரைக் கின்றது. செயற்கெளிய வாவன மனம் வேண்டியவாறே அதனைப் பொறிவழிகளால் புலன்களிற் செலுத்துதலும், வெஃகலும் வெகுடலும் முதலாயின. செயற்கரியவாவன இயமம் நியமம் முதலாய எண்வகை யோகவுறுப்புக்கள் ' எனப் பரிமேலழகர் கூறும் விளக்கம் இங்கு நினைக்கத் தகுவதாகும். எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்த பெருமக்களே திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்ற சிவனடியார்களாதலின், அவர்களது வரலாறுகளை விரித்துரைக்கும் திருத்தொண்டர் புராண மாகிய இந்நூல் பெரிய புராணம் என வழங்கப்பெறுவ தாயிற்று. இந்நூலே எடுக்கு மாக்கதை என ஆசிரியூர் குறித்துள்ளமையும் பெரிய புராணம் என்ற இப்பெயர் வழக்கத்திற்குப் பொருந்திய சான் ருகும். இந் நூலுக்கு ஆசிரியர் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் என்ப தாகும். இவ்வுண்மை,

இங்கிதன் நாமங் கூறின் இவ்வுலகத்து முன் குள் தங்கிருள் இரண்டின் மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற பொங்கிய இருளே ஏனே ப் புறவிருள் போக்குகின் ற செங்கதிரவன் போல் நீக்குத் திருத்தொண்டர் புராணம்

என் பாம் .

என இந்நூற்பாயிரத்தில் ஆசிரியர் குறித்துள்ளமையால் நன்கு விளங்கும். உலகிற் பரவியுள்ள புறவிருளைப் போக்குகின்ற கதிரவனைப் போன்று மக்களின் சிந்தையிற் செறிந்துள்ள ஆணவமாகிய அக விருளைப் போக்குவது திருத்தொண்டர் புராணமாகிய இந்நூல் என ஆசிரியர் இந்நூலின் பெயர் கூறும் பொழுதே இந்நூலின் பயனையும்

ஒருங்கு கூறியுள்ளமை காணலாம்.

திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்றுள்ள அடியார்களின் வரலாறுகளை யெல்லாம் விரித்துணர்த்தும் முறையில் அழகியதொரு செந்தமிழ்க் காப்பியத்தை ஆக்கி, யுதவ எண்ணிய ஆசிரியர் சேக்கிழார், தம் காப்பியத்திற்கு

53