பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/848

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8$盛 பன்னிரு திருமுறை வரலாறு

மூலமாகிய திருத்தொண்டத் தொகையினைத் திருவாய் மலர்ந்தருளிய நம்பியாரூரரையே தம் காப்பியத்துக்குரிய பாட்டுடைத் தலைவராகக் கொண்டார். தன்னே ரில்லாத் தலைவராகிய நம்பியாரூரரது வரலாற்றின் இடையே அவர் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டத் தொகையின் பொருளை விரித்துரைக்கும் முறையில் அத்திருப்பதிகத்திற் போற்றப்பெற்றுள்ள திருத்தொண்டர்களின் வரலாறுகளை நிரல்பட அமைத்து, நம்பியாருசர் தம் தோழராகிய சேரமான் பெருமாளுடன் திருக்கயிலாயத்தைச் சேர்ந்து இறைவன் திருவருள் பெற்று இன்புற்ற செய்தியுடன் இக்காப்பியத்தை நிறைவு செய்துள்ளார்.

இந்நூல், திருமலைச் சருக்கம் முதல் வெள்ளானைச் சருக்கம் ஈருகப் பதின் மூன்று சருக்கங்களையுடையது. முதற்கண் உள்ள திருமலைச் சருக்கம் திருமலைச் சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு, திருக்கூட்டச் சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம் என ஐந்து பகுதி களைக் கொண்டதாகும். திருக்கயிலாயத்தில் சிவபெரு மானுக்கு அணுக்கத் தொண்டுபுரிந்த ஆலாலசுந்தரர், உமையம்மையாருடைய சேடிகளாகிய கமலினி அணிந் திதையாகிய மாதர் இருவர் மேலும் மனத்தினைச் செலுத் திண்மையால், ! நீ மாதர் மேல் மனம் வைத்தனை ஆதலால் தென்புவி மீது தோன்றி, அம் மெல்லியலாருடன் காத லின்பம் கலந்தணைவாய் என இறைவன் பணித்த வண்ணம் திருமுனைப்பாடி நாட்டில் திருநாவலூரில் மாதொருபாகர்ைக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதி சைவ வேதியர் மரபில் சடையனர்க்கும் இசைஞானியார்க்கும் மகவாகத் தோன்றிஞர் நரசிங்க முனையரையரால் அன் புடன் வளர்க்கப்பெற்ருர் : புத்துர்ச் சடங்கவி சிவாசாரி யாருடைய மகளை மனம் பேசித் திருமணம் செய்யும் நிலையில், வெண்ணெய் நல்லூர் அருட்டுறையிறைவர் கிழவேதியராகத் தோன்றி, ஆரூரனே! நீ எனக்கு வழி வழி யடியவன் ' என ஆவண வோலைகாட்டித் திருவெண் ணெய் நல்லூர்ச் சபையில் வழக்குரைத்துத் தடுத்தாட் கொள்ளப்பெற்ருர் நமக்கு அன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என அருட்டுறை விறைவர் பணித்த வண்ணம், மெய்த்தாயினும் இனிய அப்பெரு