பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/897

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் §§§

இதன்பின் தில்லை வாழந்தனர் முதலாகத் திரு நீல கண்டப் பெரும்பானர் ஈருகத் திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்றுள்ள அடியார்களின் வரலாறுகள், தில்லை வாழந்தணர் சருக்கம் முதலாக மன்னிய சீர்ச்சருக்கம் ஈருகப் பதினுெரு சருக்கங்களில் முறையே விரித்துரைக்கப் பெறுகின்றன. பரவையார் கேள்வராகிய நம்பியாரூரர், திருத்தொண்டத் தொகை யருளிய பின் திருவாரூரினின்றும் புறப்பட்டுப் பல தலங்களைப் பண்பொருந்திய செந்தமிழ்ப் பாமாலை களாற் பாடிப் போற்றித் திருவொற்றியூரையடைந்து அணிந்திதையாராகிய சங்கிலியாரை இறைவனரு ளாற் கண்ணுற்றுக் காதல்கொண்டு மணந்து அவருடன் பல நாள் இன்புற்று மகிழ்பவர், அவரைப் பிரிந்து திருவாரூரை யடைந்து பரவையாரது புலவியைத் தீர்த்தல் வேண்டி நள்ளிரவிலே ஆரூரிறைவரை இருமுறை தூதாக அனுப்பி, அது காரணமாக ஏயர்கோன் கலிக்காம நாயனுர் தம்மீது கொண்ட வெகுளியை இறைவனருளால் தணிவித்து, அவரது அரிய நண்பினைப்பெற்று மகிழ்ந்தது வரையுள்ள செய்திகள் ஏயர்கோன் கலிக்காம நாயனர் புராணத்தில் இடம்பெற்றுள்ளன. பின்பு நம்பியாரூரர், திருவாரூரில் தம்மை அன்புடன் காண வந்த கழறிற்றறிவார் நாயனசது நட்புப்பெற்றுச் சேரமான் தோழராய், அவருடன் சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலுமுள்ள பல தலங்களை வணங் கிப் பாடிச் சேர நாட்டின் தலைநகராகிய கொடுங்கோளுரை யடைந்து சேரமான் பெருமாளால் உபசரிக்கப்பெற்று மீண்டும் , திருவாரூருக்குத் திரும்பியது வரையுள்ள செய்திகள் கழறிற்றறிவார் நாயனர் புராணத்தில் விரித்துரைக்கப் பெற்றன.

திருவாரூரிற் பரவையாருடன் கூடி வாழ்ந்து புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றியிருந்த நம்பி யாருர்ர், தம் அன்புடைத் தோழராகிய சேரமான் பெருமானைக் காண விரும்பிப் புறப்பட்டுக் கொங்கு நாட்டை யடைந்து திருப்புக்கொளியூர் அவிநாசிமடுவில் முதலையால் விழுங்கப்பட்ட அந்தணச் சிறுவன மீட்டருளிச் சேரமான் பெருமாள் உவந்து வரவேற்கக் கொடுங்கோளுரை யடைந்து திருவஞ்சைக்களத் திருக் கோயிலில் எழுந்தருளிய பெருமான் யிறைஞ்சித் தமது