பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/898

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88链 பன்னிரு திருமுறை வரலாறு

பாசத் தொடர்பினை நீக்கியருளும்படி திருப்பதிகம் பாடி வேண்டியபொழுது, கயிலைப்பெருமான் வெள்ளே யானையை அனுப்பியருள அதன்மீது அமர்ந்து களை யாவுடலோடு சேரமான் பெருமாள் குதிரைமீதேறித் தம்மைத் தொடர்ந்து உடன் வரத் திருக்கயிலாயத்தை யடைந்து அம்மையப்பரை இறைஞ்சிப் போற்றித் தமக்குரிய அணுக்கத் திருத்தொண்டில் அமர்ந்தது வரையுள்ள செய்திகள், இக்காப்பியத்தின் இறுதியிலுள்ள வெள் ளானைச் சருக்கத்தில் விரித்துக் கூறப்பெற்றன. ஆகவே திருத்தொண்டர்புராணமாகிய இக்காப்பியத்தில் முதலிலும் நடுவிலும் முடிவிலும் இக்காப்பியத் தலைவராகிய நம்பியா ரூசரது வரலாறு இடையீடின் றித் தொடர்ந்து அமைய, அவர் அருளிய திருததொண்டத் தொகையிற் போற்றப் பெற்ற தில்லைவாழ் அந்தணர் முதல் திரு நீலகண்டப் பெரும்பானர் ஈ ரு க வு ள் ள திருத்தொண்டர்களின் வரலாறுகள் தொடர்ந்து கூறப்பெற்றுள்ளமை, இக்காப் பியத்திற் போற்றப்பெறும் தன்னேரில்லாத் தலைவர் நம்பியாரூரரே என்னும் உண்மையினை நன்கு புலப் படுத்துதல் காணலாம்.

திருத்தொண்டர் புராணக் காப்பிய த்தின் தலைவராகிய சுந்தரர் வரலாறும், இவரால் திருத்தொண்டத் தொகையிற் போற்றப்பெற்றுள்ள திருமுறையாசிரியர்களாகிய திரு ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், திருமூலர், காரைக்கா லம்மையார் ஐயடிகள் காடவர்கோன் நாயனுர், சேரமான் பெருமாள் நாயன ஆகிய அடியார்களின் வரலாறுகளும் இந்நூலாசிரியராகிய அருண் மொழித் தேவர் வாக்கினை அடியொற்றி முன்னர் விரிவாக ஆராய்ந்து விளக்கப் பெற்றுள்ளன. இனி, தில்லைவாழந்தனர் முதல் உள்ள ஏனைய அடியார்களின் வரலாற்றுக் குறிப்புக்கள் முறையே இங்குச் சுருக்கமாகத் தரப் பெறும்.

தில்லைவாழந்தனர்

令 அருமறைகளை நன்குணர்ந்து தில்லைப்பதியில் வாழும் அந்தணர்களாகிய இவர்கள், தில்லைச் சிற்றம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் கூத்தப்பெருமானுக்கு அகம்படித் தொண்டு புரியும் திருக்கூடடத்தினராவர். திருவாரூர்ப்