பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/901

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 887

யில் திருநீலகண்டர் என்னும் பெயருடன் பேசப்பெறும் அடியார்கள் இருவர் இருத்தலால், அவ்விருவரையும் வேது பிரித்துணர்தல் வேண்டித் திருநீலகண்டக் குயவனுர் எனவும் திருநீல வண் த்துப் ப9 னணு எனவும் அவர் தம் குலத்தோடு இணைத்துப் போற்றுதல் மரபாயிற் றெனத் தெரிகிறது.

திருநீலகண்டக் குயவனுர் தில்லைப்பதியிற் பிறந்தவர் என்பது, தில்லைத் திருநீலகண்டக்குயவனம் செய்தவனே! என நம்பியாண்டார் நம்பிகள் போற்றியுள்ளமையாற் புலளும். வேட்கோவர் குலத்தில் தோன்றிய இந்நாய ஞர்க்கு வழங்கும் திருநீலகண்டர் என்பது, இவரது இயற் பெயரன்று : பாற்கடலில் தோன்றிய ஆலகால நஞ்சினை உலகெலாம் உய்ய உட்கொண்டு அடக்கிய அருளாள ளுகிய இறைவனது திருநீலகண்டத்தின்கண்ணே தாம் கொண்ட பேரார்வத்தின் காரணமாகத் திருநீலகண்டம் என்னும் திருப்பெயரை இடைவிடாது ஒதும் இயல்புடைய ராதல்பற்றித் திருநீலகண்டர் என்பது இவர்க்குக் காரணப் பெயராயிற்று.

திருநீலகண்டராகிய இப்பெருந்தகையார், தில்லைச் சிற்றம்பலத்தே அம்மை காண அற்புதத் தனிக் கூத்தாடும் நாதனர் கழல்கள் வாழ்த்தி வழிபடும் நலத்தின் மிக்கவர் ; பொய்கடிந்து அறத்தின் வாழ்பவர் ; இறைவன் பால் மெய் யன்புடைய அடியார்களுக்கு ஏற்ற பணியினைச் செய்யும் விருப்புடையவர் : சைவ மெய்த்திருவின் சார்பே பொரு ளெனக்கொண்டு வையகம் போற்றும் வாழ்க்கை மனையறம் புரிந்து வாழ்பவர் ; தம் மரபுக்கு ஏற்ப மட்பாண்டங்களைச் செய்து விற்று அதனுல்வரும் பொருளினைக்கொண்டு வாழ்க்கை நடத்துபவர் ; சிவனடியார்களுக்கு உண்கல மாகிய திருவோட்டினை அளித்தலைத் தமது அன்பின் கடமையாகக்கொண்டு ஒழுகுபவர். அவருடைய மனைவி யார் அருந்ததியை ஒத்த கற்பினையுடையவர். இளமை மீதுார இன்பத்துறையில் எளியராகிய திருநீலகண்டர், ஒருநாள் பரத்தைபால் அணைந்து தம் மனைவியாரை அணுகிய நிலையில், அவரது புறத்தொழுக்கினையறிந்த அவ்வம்மையார், தம் கணவரைநோக்கி, எம்மைத் தீண்டு

வீராகில் திருநீலகண்டம் எனத் திருநீலகண்டத்தின்