பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/900

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$85 பன்னிரு திருமுறை வரலாறு

கோண்டு தத்துவ நெறியில் நிற்பவர்கள் : நான்கு வேதங் களையும் ஆறு அங்கங்களையும் கற்று வல்லவர்கள் : தில்லைப் பொன்னம்பலத்தில் திரு தடம் புரியும் செல்வன் கழ லேத்துஞ் செல்வத்தையே செல்வமெனக்கொண்ட திரு வுடையந்தணர்கள் , மறுவற்ற குடும்பத்திலே பிறந்து மாறிலா நல்லொழுக்கத்தையே அணிகலனகப் பூண்ட வர்கள் ; ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்னும் அறுதொழில் ஆட்சியினுல் கலியின் தீமையை நீக்கியவர்கள் ; தம்மால் மேற்கொள்ளத் தக்கது திருநீறு உருத்திராக்கமாகிய சிவ சாதனமே எனவும், பெறத்தக்க நற்பேருவது சிவன் பால் அன்புடை மையே யெனவும் கொண்டு வாழ்பவர்கள் : ஞானம், யோகம், கிரியை, சரியை ஆகிய நால்வகை நன்னெறி களையும் குற்றமறத் தெரிந்து மேம்பட்டவர்கள் ; தானமும் தவமும் வல்லவர்கள் , ஊனம் சிறிதும் இல்லாதவர்கள் ; உலகெலாம் புகழும் வண்ணம் மானமும் பொறையும் தாங்கி மனையறம் புரிந்து வாழ்பவர்கள். செம்மையால் மிக்க சிந்தைத் தெய்வ வேதியராகிய இவர்கள், தாங்கள் எப்பொழுதும் போற்றி வணங்கும் நிலையில் முதல்வனுகிய இறைவனை இப்பிறப்பிலேயே தமக்குரியளுகப் பெற்று வாழ்பவர்கள் ; இதனினும் சிறந்ததாக இனிமேற் பெறு தற்குரிய பேறெதுவும் இல்லாதவர்கள். அன்று, வன் ருெண்டர் திருத்தொண்டத் தொகையினைப்பாட ஆரூர் அண்ணல் திருவாக்கால் முன்னர்க் குறிக்கப்பெற்ற முதற் பொருளாக இவர்கள் அமைந்தார்கள் என்ருல், இன்று இவர்தம் பெருமை எம்மால் சொல்லும் தரத்ததாகுமோ? உலகெலாம் புகழும் திருமறையோராகிய இவர்கள் என்றும் பொது நடம் போற்றி வாழ்வார்களாக எனத் தொண்டர் சீர்பரவுவாராகிய சேக்கிழாரடிகள் தில்லைவா ழந்தணர் பெருமையினை விரித்துக் கூறியுள்ளார்.

திருநீலகண்டக் குயவ நாயனர்

இவரைத் திருநீலகண்டத்துக் குயவனுர்க்கு அடி யேன்” எனப் போற்றுவர் நம்பியாரூரர். சாதிகுலம் முத லிய வேற்றுமைகளைக் கடந்தவர்கள் திருத்தொண்டர்கள். ஆகவே அவர்களை அவர்தம் குலத்துடன் இணைத்துப் பேசுதல் மரபன்று. எனினும் திருத்தொண்டத் தொகை