பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

890 பன்னிரு திருமுறை வரலாறு

வேட்கோவரே! நீர் நிகழ்ந்ததைச் சொல்வீராக’ என்றனர். அருமறை அந்தணர்களே! இங்கு நிற்கின்ற சிவயோகியார் பொன்னினும் மனையினும் போற்றத்தக்கதென்று சொல்லி என்பால் தந்த திருவோடு நான் பேணிப் பாதுகாத்து வைத்த இடத்திலிருந்து இடம் பெயர்ந்து காணுமற்போய் விட்டது என்ருர் திருநீலகண்டர். " இவர் தாம் வைத்த ஒட்டினைக் கெடுத்தீரானல் தரும் இவர் குளத்தில் மூழ்கித் தருக என்று உரைத்தாராயின் மனைவியோடு மூழ்கி உறுதி கூறுதல் முறையேயாகும்” என்று தில்லை வாழ்ந்தணர் முடிவு கூறினர்கள்.

அதுகேட்ட திருநீலகண்டர் தம் மனைவியாரைத் தீண்ட இயலாமைக்குரிய சபதத்தை வெளிப்படுத்த இயலாதவராய்ப் பொருந்தியவகையால் மூழ்கித் தருகின் றேன்’ என்று சொல்லி, சிவயோகியாருடன் தம் வீட்டினை யடைந்து மனைவியாரை அழைத்துக்கொண்டு தில்லைத் திருப்புவீச்சுரத்திருக்கோயிலின் முன்னுள்ள குளத்தினை யடைந்தார் , திருநீலகண்டத்தின் ஆணையினை வழுவாது காக்கும் நிலையில் மூங்கிற்கோலின் ஒருமுனையினைத் தாமும் மந்ருெரு முனையினைத் தம் மனைவியாரும் பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கப்புக்கபொழுது, சிவ யோகியார் மாதைத் தீண்டிக்கொண்டு உடன் மூழ்குவீராக’ என்று வற்புறுத்த, அவ்வாறு செய்தற்குத் தடையாகத் தங்களிடையேயுள்ள சபதத்தை அங்குள்னார் கேட்ப எடுத்துச்சொல்லித் திருநீலகண்டர் மனைவியாருடன் குளத்தில் மூழ்கினர். வாவியில் மூழ்கிக் கரையேறும் கணவரும் மனைவியாரும் மேவிய முதுமை நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத் தோன்றிஞர்கள். அந்த அற்புதக் காட்சியைக் கண்டார் அனைவரும், அங்கு நின்ற சிவயோகியாரைக் காணுது மருண்டு நின்றனர். மறைந்த இறைவர், அம்மையப்பராக விடைமேல் தோன்றித் திருநீலகண்டரையும் அவர்தம் மனைவியாரை யும் நோக்கி ஐம்புலன்களை வென்றவர்களே! என்றும் இவ்விளமை நீங்காது நம்பால் விருப்புடன் இருப்பீராக’ என அருள்புரிந்து மறைந்தருள, அவ்விருவரும் இவ் வுலகில் திருவருள் வழிப்பட்ட நற்பணிகள் பல புரிந்து சிவலோகத்தினையடைந்து பெறலரும் இளமை பெற்றுப் பேரின்பம் உற்ருர்கள். ~