பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

898 பன்னிரு திருமுறை வரலாறு

பிறந்தவர். குறுநில மன்னராகிய இவரது இயற்பெயர் இதுவெனத் தெரியவில்லை. சிவனடியார் வேடத்தையே மெய்ப்பொருள் என ச் சிந்தித்துப் போற்றி வந்தமையால் மெய்ப்பொருள் நாயனர் என்பது இவர்க்குக் காரணப் பெயராயிற்று. அறநெறி வழாமல் அரசுபுரியும் இவ் வேந்தர் பெருமான், பகைவரை வென்று வேத நன்னெறி யின் மெய்ம்மை விளங்கிடத் தாம் தேடிய பொருள்களும் நீடு செல்வமும் தில்லைமன்றுள் ஆடிய பெருமான் அன் பர்க்கு ஆவன ஆகும் என்று கொண்டு சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றைக் குறைவறக் கொடுத்து வந்தார்.

இவ்வாருெழுகும் நாளில் இவருடன் பகைமை கொண்டு பலமுறை போர் செய்து தோற்று அவமானப் பட்டோடிய முத்தநாதன் என்னும் மன்னன், இவரது அடியார் பத்தியை யறிந்து இவரை வஞ்சனையாற் கொன் ருெழிக்க எண் ணினன். சிவனடியாரைப் போல மெய் யெலாம் நீறுபூசிச் சடைமுடி தரித்துக் கையிலே புத்தக முடிப்பென்று அதனுள்ளே ஆயுதத்தினை மறைத்து வைத்துக்கொண்டு, சேதிபர் பெருமானது அரண்மனை வாயிலை அடைந்தான். அவனைச் சிவனடியாரெனக் கருதிய , வாயில் காவலர், கைதொழுது உள்ளே புக விட்டனர். இவ்வாறு அடியார் வேடத்துடன் அரண்மனை வாயில்களைக் கடந்து செல்லும் முத்தநாதன், மெய்ப் பொருள் வேந்தர் தங்கிய அறையின் நுழைவாயிலை அடைந்தபொழுது அங்கே நின்ற தத்தன் என்னும் வாயில் காவலன், அரசர் இப்பொழுது துயில்கொள் கின் ருர். தாங்கள் காலமறிந்து செல்லுதல் வேண்டும் ' என்று சொல்லித் தடுத்தான். அந்நிலையிற் பொய்த்தவனுகிய முத்தநாதன், யான் அரசற்கு உறுதிப்பொருளை உப தேசித்தல் வேண்டும். தடுக்காமல் இங்கு நிற்பாயாக’ எனத் தத்தனுக்குச் சொல்லிவிட்டு உள்ளே புகுந்து, அரசி உடனிருக்க அரசு கட்டிலிலே துயிலமர்ந்த அரசரை அணு கின்ை. அது கண்டு அரசியார், விரைந்தெழுந்து அர சரைத் துயிலெழுப்பினர். விழித்தெழுந்த வேந்தர், சிவனடியார் வந்தார் என்று தலைமேற் கைகுவித்து எதிர் சென்று வணங்கி, மங்கலம் பெருக என் வாழ்வு வந்தனை ந் தது என்னத் தாங்கள் இங்கு எழுந்தருளப் பெற்றேன் ! என்று கூறி வரவேற்ருர், ! உங்கள் நாயனுர் உரைத்