பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/914

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

900 பன்னிரு திருமுறை வரலாறு

மெய்ப்பொருள் நாயஞர், இன்று எனக்கு ஐயன் செய்த இப்பேருதவியை வேறு யார் செய்ய வல்லார்கள் என்று சொல்லி அவன் பால் நிறைபெருங் கருணையுடையராய், அரசாட்சிக்குரிய புதல்வர் முதலியோர்க்கும் தமது பிரிவி ஞல் வருந்தும் சுற்றத்தவர்க்கும் பொருந்திய கடமைகளை யெல்லாம் விரித்துரைப்பவர், விதி முறைப்படிப் பரவி யணியத்தக்க திருநீற்றின் மேல் வைத்தற்குரிய அன்பின் திறத்தை எக்காலத்தும் நெகிழாது பேணிப் போற்றுவீர்க ளாக என்று அறிவுறுத்திப் பொன்னம்பலத்தில் ஆடல் புரிந்தருளும் திருவடிகளைச் சிந்தித்தார். அப்பொழுது அம்மையப்பராகிய இறைவர் மெய்ப்பொருள் நாயனர் க்குத் தமது திருக்கோலத்தைக் காட்டியருளி அண்ட வானவர் கட்கு எட்டாத தம்முடைய திருவடி நிழலிலே தங்கிக் கும்பிட்டுறையும் பெரு வாழ்வை அவர்க்கு அளித்தருளினர்.

விறன்மிண்ட நாயனர்

விரிபொழில் சூழ்குன் றையார் விறன்மிண்டர்க்கு அடி யேன்” எனப் போற்றப்பெற்ற இவர், சேரர்க்குரிய மலை நாட்டிலே திருச்செங்குன்றுாரிலே வேளாளர் குலத்திலே தோன்றியவர். இவர், சிவபெருமான் திருவடிகளையே பற்ருகப் பற்றி ஏனைய பற்றுக்களை யெல்லாம் அறுத் தொழிக்கும் விறலுடையார் ஆதலால் விறன்மிண்டர் என அழைக்கப்பெற்ருர். அடியார் பத்தியிலே சிறந்த இவர், சிவனுறையும் திருத்தலங்களை யெல்லாம் வழிபட்டுச் செல்லுங்காலத்து அடியார் திருக்கூட்டத்தின் எதிர் சென்று அன்பினுல் பரவிப் போற்றிய பின்னரே ஆலயத் துள் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருவடிகளை வணங்கும் இயல்பினையுடையவர். ஈசனிடத்து தேச முடையராகிய இவர், மலைநாட்டிலிருந்து புறப்பட்டுப் பல தலங்களை வணங்கிக்கொண்டு திருவாரூரையடைந்து அங்குத் தேவாசிரிய மண்டபத்தில் வீற்றிருக்கும் சிவனடி யார்களை வழிபட்டிருந்தார்.

ஒரு நாள், சுந்தரமூர்த்தி நாயனர் திருவாரூர்ப் பெரு மானை வழிபடச் செல்பவர், அத் தேவாசிரிய மண்டபத்தி லுள்ள சிவனடியார்களை அணுகி வழிபடாது ஒரு வழியாக ஒதுங்கிச் செல்வதைக் கண்ட விறன்மிண்டர், சிவ னடியார் திருக்கூட்டம், இதனைப் பேளுது ஒதுங்கிச்