பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/940

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$926 பன்னிரு திருமுறை வரலாறு

நான் யாது செய்வேன் ' என்று கவலையுற்று, மழை விட்டு விடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்ருர். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் அணுகுவதாயிற்று. திருக் குறிப்புத் தொண்டர் குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி அந்தோ தவறிப் போயிற்றே என்று நிலமிசை வீழ்ந்தார்; மழையோ விடவில்லை : அடியார் சொல்லிய கால எல்லே யும் கழிந்து விட்டது. முன்னமே அவரது உடையினைத் துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதனை அறிந்திலேன். அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி இதுவே செயல்' என்று எழுந்து துணி துவைக்கும் கற்பாறையிலே எனது தலையைச் சிந்தும்படி மோதுவேன் என்று தமது தலையை மோதினர். அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. விசும்பில் விடாது பெய்த நீர்மழை நீங்க மலர் மழை பொழிந்தது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளிக் காட்சி கொடுத்தருளிஞர். அத்தெய்வக்காட்சியைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர் அன்புருகக் கைதொழுது தனி நின் ருர். சிவபெருமான் அவரை நோக்கி, ! உனது அன்பின் திறத்தை மூவுலகத் தாரும் அறியச் செய்தோம். இனி நீ நம்முடைய உலகத்தையடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக' என்று திருவருள் புரிந்து மறைந்தருளினர்.

சண்டேசுர நாயஞர்

பொன்னிநாட்டில் மண்ணியாற்றின் தென்கரையி லமைந்த சேய்ஞலூரில் பெருமை விளங்கும் வேதியர் மரபிற் காசிபகோத்திரத்தில் எச்சதத்தன் என்பானுக்கு அவன் மனைவி பவித்திரை வயிற்றில் தோன்றியவர் விசார சருமனர். அக்குழந்தைக்கு ஐந்து வயது நிரம்பிய அளவில் முந்தை அறிவின் தொடர்ச்சியினுல் வேத சிவாகமங்களின் உணர்வு சிந்தையில் தோன்றி வளர்ந்தது. பெற்ளுேர்கள் ஏழாம் வயதில் உபநயனம் முடித்துக் கல்விப் பயிற்சியைத் தொடங்குவித்தார்கள். குலவுமறையும் பல கலையும் சொல்லிக் கொடுப்பதற்கு முன்னமே விரைந்து மனங் கொள்ளும் அக் குழந்தையின் அறிவின் திறங்கண்டு