பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/944

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

928

பன்னிரு திருமுறை வரலாறு


திலே சிவபூசனை செய்யும் பேரார்வம் தலைப்பட்டது. உடனே அவர் மண்ணியாற்றின் கரையிலமைந்த மணல் திட்டிலே திருவாத்தி மரத்தின் கீழே வெண்மணலால் சிவலிங்கம் அமைத்து, திருக்கோயிலும் கோபுரமும் மதிலும் வரைந்து, திருவாத்திப்பூ முதலிய நறுமலர்களைப் பறித்துக் கூடையிற் கொணர்ந்தார். புதிய குடங்களைத் தேடிக் கொணர்ந்து பசுக்கள் ஒவ்வொன்றினிடமும் ஒருமுறை சென்று மடியைத் தீண்டிய அளவில் அவை குடம் நிறையப் பாலைப் பொழிந்தன. அப்பாற் குடத்தினைக் கொண்டுபோய் மணலால் அமைத்த ஆலயத்தில் தாபித்து மலர் தூவி அருச்சித்து வெண்மணலால் அமைத்த சிவலிங்கப் பெரு மானுக்குத் திருமஞ்சனம் ஆட்டி வழிபாடு செய்தார். அடியார் அன்புக்கு எளிவரும் சிவபெருமானும் அவ்வி லிங்கத் திருமேனியில் நின்று விசாரசருமரது வழிபாட்டினை ஏற்றருளிஞர்.

இவ்வாறு விசாரசருமர் பல நாட்களாகப் பார்ப்பவர் களுக்கு விளையாட்டுப்போலத் தோன்றுகின்ற சிவபூசை யைச் செய்துவரும்பொழுது அதனைக்கண்ட ஒருவன் அதன் உண்மையையறியாது அச்செய்தியை அவ்வூர் அந்தணர் களிடம் தெரிவித்தான். அவர்கள் ஊர்ச்சபையாரிடம் கூறினர். சபையார் எச்சதத்தனை அழைத்து அந்தணர் ஆகுதியின் பொருட்டுப் பால் கறக்கும் பசுக்களை நின்மைந்தன் மேய்ப்பதாகச் சொல்லிக்கொண்டு சென்று பாலைக் கறந்து வீணே மணலிற் கொட்டுகின்ருன் : என்றனர். அதுகேட்டு அஞ்சிய எச்சதத்தன் சிறுபிள்ளை செய்த இக்குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும்’ என்று இரந்து வணங்கி, ' இனி அவன் அவ்வாறு செய்தால் அது என் குற்றமாம் என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினுன்.

எச்சதத்தன் மறுநாட் காலை அதன் உண்மையை அறிந்துகொள்ள எண்ணிப் பசு மேய்க்கச் செல்லும் விசார சருமர் அறியாதபடி அவர் பின்னே சென்று அங்கு நிகழ் வதை அறியக் குராமரத்தில் ஏறி ஒளித்திருந்தான். விசாரசருமர் நீராடி முன்போல மணலால் சிவலிங்கம் அமைத்து மலர் பறித்து வந்து பாற்குடத்தினைக் கொணர்ந்து அருச்சனைக்கு வேண்டிய பிறவற்றையும் அமைத்துச் சிவலிங்கப்பெருமானுக்குப் பாலைத் திருமஞ்சன