பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/945

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 929

மாக ஆட்டினர். குராமரத்தில் ஒளித்திருந்த எச்சதத்தன் வெகுண்டு இறங்கிச் சென்று தன் கையிலுள்ள தண்டினல் விசாரசருமருடைய முதுகிலே அடித்துக் கொடுஞ்சொற் கூறினன். அவருடைய மனம் சிவபூசையில் ஒன்றியிருந் தமையால் அவன் செய்ததெதுவும் அவருக்குத் தோன்ற வில்லை. மேலாம் பெரியோர் தந்தை வெகுண்டு பலகால் தன்னை அடிக்கவும் அதனையுணராராகி இறைவனுக்குப் பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியிற் சலியாதிருந்தனர். அதுகண்டு செற்றங்கொண்ட எச்சதத்தன் திருமஞ்சனக் குடப்பாலைக் காலால் இடறித் தள்ளினுன். பால் சிந்தியது கண்ட விசாரசருமர் அதனையிடறித் தள்ளியவன் தன் தந்தையென அறிந்து அவனுடைய கால்களைத் துணித்தல் தகுதி என்று எண்ணி அருகே கிடந்த கோலொன்றை எடுக்க, இறைவரருளால் அதுவே மழுப்படையாயிட, அது கொண்டு தந்தையின் கால்களை வெட்டி வீழ்த்தினர். மறையோனும் வீழ்ந்தான். சிவபூசைக்கு நேர்ந்த இடர் அகற்றிய விசாரசருமர் மீண்டும் சிவபூசையினைச் செய்ய லுற்ருர். அந்நிலையிற் சிவபெருமான் உமையம்மையா ரோடும் விடைமேல் எழுந்தருளினர். பூதகணங்கள் புடைசூழ முனிவர் முதலோர் போற்றிசைப்ப இறைவன் வெளிப்பட்ட ருளுவது கண்ட பத்திமுதிர்ந்த பாலகளுர், இறைவன் பாத மலர்கள்மேல் விழுந்து வணங்கினர். சிவபெருமானும் தம் திருவடிக்கீழ் வீழ்ந்த விசாரசருமரை வாரி எடுத்து அருள்நோக்கஞ் செய்து, நம் பொருட்டு நின்னைப் பெற்ற தந்தையை மழுவினல் எறிந்தாய். இனி உனக்கு அடுத்த தந்தை நாம் ' என்று அருள் செய்து அனைத்தருளிக் கருணையால் தடவி உச்சி மோந்து மகிழ்ந்தருளினர்.

சிவபெருமானது திருக்கைகளால் தீண்டப்பெற்ற வேதியச் சிறுவராய விசாரசருமர், மாயையாக்கையின்மேல் அளவின் றுயர்ந்த சிவமயமாகித் திருவருளில் மூழ்கிப் பேரொளிப் பிழம்பாகத் தோன்றினர். அண்டர்பிரானுகிய சிவபெருமானும் அவரைத் தொண்டர்க்குத் தலைவனுக்கி, அனைத்தும் நாம் உண்ட கலமும் உடுப்பனவும் சூடுவன வும் உனக்காகச் சண்டிசனும் ஆம் பதம் தந்தோம்’ என்று திருவாய் மலர்ந்து தம்முடைய சடையில் அணிந்துள்ள கொன்றை மலர் மாலையை எடுத்து அப்புதல்வர் திருமுடி

59