பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/956

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

940

பன்னிரு திருமுறை வரலாறு


நமி நந்தியே! நினது கவலையை மாற்றுக. இதன் அயலே யுள்ள குளத்தின் நீரை முகந்து வந்து வார்த்து விளக் கேற்றுக’ என்றதொரு அருள்மொழி விசும்பில் தோன்றி யது. அது கேட்டு மகிழ்ந்த நமிநந்தியடிகள், இறைவ னருளே இதுவாம் என்றெண்ணிக் குளத்தின் நடுவே புகுந்து நாதர் நாமமாகிய திருவைந்தெழுத்தோதி நீரை முகந்துகொண்டு கரையேறிக் கோயிலையடைந்து உலகத் தார் அதிசயிப்ப அகலில் திரியிட்டு நீர் வார்த்து விளக் கேற்றினர். சோதி விளக்கு ஒன்று ஏற்றுதலும் சுடர் விட் டொளிர்வது கண்டு அமணர் காண நாதரருளால் திரு விளக்குகள் பல விடியுமளவும் நீரால் எரித்தார்,

இவ்வாறு ஆரூர் அரனெறியப்பர்க்கு நாளும் இரவில் நீரால் திருவிளக்கிட்டுத் தம்முடைய ஊராகிய ஏமப் பேறுார்க்குச் சென்று சிவபூசை முடித்துத் திருவமு து செய்து துயில் கொள்ளும் வழக்கமுடையராயிருந்தார். அப்பொழுது தண்டியடிகள் நாயனரால் சமணர்கள் கலக்கம் விளைந்து அவ்வூரைவிட்டு அகன்றனர். திருவாரூர் நீற்றின் பெருமை பெற்று விளங்கியது. நீதிவளவன் ஆரூர்ப்பெருமானுக்கு நிபந்தம் பல அளித்துப் பங்குனி யுத்திரப் பெரு விழாவைச் சிறப்புறச் செய்தற்கு தமி நந்தியடிகள் உறுதுணையாய் விளங்கினர். திருவாரூர்ப் பெருமான் திருவிழா நாட்களில் ஒரு நாள் மணலி என்ற ஊருக்குத் திருவுலா எழுந்தருளினர். எல்லாக் குலத்து மக்களும் இறைவனே உடன் சேவித்துச் சென்ருர்கள். நமிநந்தியடிகளும் அவர்கள் எல்லாருடனும் உடன்சென்று திருவோலக்கம்கண்டு மகிழ்ந்தார். இறைவர் திரும்பித் திருக்கோயிலிற்புக மாலைப்பொழுதாயிற்று. நமிநந்தியடிகள் நள்ளிருளில் தமது ஊரையடைந்து வீட்டி னுள்ளே புகாமல் புறக்கடையிலே படுத்துத்துயின் ருர், அந் நிலையில் அவர் மனைவியார் வந்து அவரைத் துயிலு ணர்த்தி வீட்டினுள்ளே எழுந்தருளிச் சிவார்ச்சனையையும் தீவளர்த்தலையும் முடித்துக்கொண்டு பள்ளிகொள்ளலாம்" என்ருர், அதுகேட்ட நமிநந்தியடிகள், இன்றையதினம் ஆரூர்ப்பெருமான் திருமணலிக்கு எழுந்தருளியபோது யானும் உடன்சேவித்துச் சென்றேன். அக்கூட்ட த்தில் எல்லாச்சாதியாரும் கலந்திருந்தமையால் தீட்டுண்டா யிற்று. ஆதலால் நீராடிய பின்னரே மனைக்குள் வருதல்