பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/960

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

944

பன்னிரு திருமுறை வரலாறு


தில் தூதுவிட்ட செய்தியைக் கேள்வியுற்று ஆண்டவனை அடியான் ஏவும் செயல் நன்று' என வெகுண்டு நம்பியாரூரர் மேற்செற்றங்கொண்டார். அதுகேட்டுத் தன்பிழையினை யுணர்ந்த வன்ருெண்டர் ஆரூரிறைவரைப் போற்றிக் கலிக்காமரது செற்றத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக் கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் நண்பராக்கத் திருவுளங்கொண்டு, ஏயர்கோன் கலிக்காமர்க்குச் சூலை நோயினைத்தந்து, வன்ருெண்டன் தீர்ப்பினன்றி முந்துற ஒழியாது’ என்றருள, அதுகேட்ட கலிக்காமர் அவ்வன் ருெண்டன் தீர்க்கத் தீர்வதைக்காட்டிலும் அந்நோய் தீராது என்னை வருத்துதலே நன்று என்றர். சிவ பெருமான் வன்தொண்டர் முன்தோன்றி, இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்றசூலை சென்று நீ தீர்ப்பாய்’ எனப்பணித்தருளினர். நம்பியாரூரரும் விரைந்து தாம் சூலை நோய் தீர்க்கவருஞ் செய்தியை ஏயர்கோனுர்க்கு முந்துறச் சொல்லியனுப்பினர். அதனை க்கேட்ட கலிக்காமர் மற்றவன் வந்து தீர்ப்பதன் முன்னம் என்னை நீங்காப் பாதகச் சூலை தன்னை உற்ற இவ் வயிற்றிளுேடும் கிழிப் பேன் ' என்று உடைவாளாற் கிழித்திட உயிரிளுேடு சூலையும் தீர்ந்தது.

கலிக்காமர் இறத்தல்கண்டு மனைவியார் உடனுயிர் விடத் துணிந்தார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அண்மையில் வந்து விட்டார் என்று வந்தோர் சொல்லக் கேட்டுத் தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ளும்படி சுற்றத்தார்களே ஏவி னர். அவர்களும் தம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர் களது வழிபாட்டினை ஏற்றுக்கொண்ட சுந்தரர் கவிக்காம னருடைய சூலையை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக முயல்கின்றேன்’ என்ருர். அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று சுவாமி ! அவருக்குத் தீங்கெதுவுமில்லை.

உள்ளே பள்ளி கொள்கின்ருர் என்றனர். கேட்ட வன்ருெண்டர், தீங்கொன்றும் இல்லை யென்றீர்கள்.

ஆயினும் என் மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் அவரை நான் விரைந்து காணுதல் வேண்டும்’ என் ருர்,