பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/981

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 965

திருவடிகளை விளக்கிஞர். அப்பொழுது, முன் தமது இல்லத்திற் பணியாளராயிருந்து பணியினை வெறுத்துச் சிவனடியாரான ஒருவர் வர அவருடைய திருவடிகளையும் விளக்கப் புகுந்தார். மனைவியார் அவ்வடியவரைக் கண்டு இவர் நம் வீட்டிற் பணி செய்தவர் போலும் என்று சிந்தித்தலால் கரக நீர்வார்க்கச் சிறிது நேரம் தாமதித்தார். அதுகண்ட கலிக்கம்பர் இவள் இச்சிவனடியாருடைய முன்னைய நிலையைக் குறித்து வெள் கி நீர் வாராதொழிந் தான் என்று துணிந்து தம் மனைவியார் கையிலுள்ள கரகத்தை வாங்கி வைத்துவிட்டு அக்கையை வாளால் தறித்துக் கரக நீரைத் தாமே எடுத்துக்கொண்டு அவ்வடி யார் திருவடிகளை விளக்கி அடியார்கள் அமுது செய்தற்கு வேண்டுவன எல்லாம் ஆர்வத்துடன் செய்து அவ்வடியார் களைத் திருவமுது செய்வித்தார். அடியார் பத்தியின் மேலிட்டால் கலிக்கம்பர் செய்த இச்செயலை, நம்பியாரூரர்

கை தடிந்த வரிசிலையான் கலிக்கம்பன்

எனத் திருத்தொண்டத் தொகையிற் குறித்துள்ளார். அடியார் வேடமென்று உணராத மனைவியாரது கைதடிந்த கலிக்கம்ப நாயனுர் சிவனடித் தொண்டுகள் பலபுரிந்து சிவ பதம் அடைந்தார்.

கலிய காயஞர்

தொண்டை நாட்டில் திருவொற்றியூரிலே தயில வினைத் தொழிலுடைய வணிகர் மரபிலே தோன்றியவர் கலிய நாயனுர், கோடிக்கணக்கான செல்வமுடைய இவர் சிவபெருமானுக்கு உரிமைத் திருத்தொண்டில் ஈடுபட்டுத் திருவொற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும் புறம்பும் அல்லும் பகலும் திருவிளக்கிடும் திருத்தொண்டினைச் செய்து வந்தார். இவரது உண்மைத் தொண்டின் பெரு மையைப் புலப்படுத்தத் திருவுளங்கொண்ட சிவபெருமான் திருவருளால் இவரது செல்வமனைத்தும் குறைய வறுமை நிலையுண்டாயிற்று. அந்நிலையில் தமது மரபிலுள்ளார் தரும் எண்ணெயை வாங்கி விற்று அதனுற் கிடைத்த பொருளால் தாம் செய்யும் திருவிளக்குப் பணியை வழு வாது செய்தார். பின்பு எண்ணெய் தருவார் கொடாமை யால் கூலிக்குச் செக்காடி அக்கூலிகொண்டு விளக்கெரித்