பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/983

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 987

யவர் கணம்புல்ல நாயஞர். கணம் புல்லர் என்பது பிற் காலத்தில் இவர்க்கு உண்டாகிய காரணப்பெயர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. பெருஞ்செல்வத்தினராகிய இவர் எப்பொருளும் ஆவன ஈசர்கழல் என்று கொண் டவர்; பெருஞ்செல்வம் பெற்ற பயன் இது வென்று சிவன் திருக்கோயிலில் திருவிளக்கெரிக்கும் பணியினை ஆர்வ முடன் செய்து வந்தார். நெடுங்காலம் சென்று வறுமை யெய்திய நிலையில் தில்லையையடைந்து தம் வீடு முதலிய வற்றை விற்ற பொருளைக்கொண்டு திருப்புலிச்சரத் திருக் கோயிலில் திருவிளக்கெரித்து வந்தார். பிறர்பால் இரந்து பொருள் பெற நினையாது, கணம்புல் என்ற ஒருவகைப் புல்லை அரிந்து விற்று, அதனுல் கிடைத்த பொருளைக் கொண்டு நெய் வாங்கி, திருவிளக்கேற்றி வந்தார். ஒரு நாள் தாமரிந்த கணம் புல் விலைக்கு விற்காதொழிய, அந்தப் புல்லினையே கொண்டு திருக்கோயிலில் விளக்காக எரித் தார். விளக்கெரிக்கும் யாமம் வரையிலும் அப்புல் விளக் கெரிக்கப்போதாமையால் அதனுடன் தமது திருமுடியையும் சேர்த்து எரித்தார். அப்பொழுது சிவபெருமான் முன்வந்து பேரருள் புரிந்தருளக் கணம் புல்லராகிய அவ்வடியார் முதல்வரை வணங்கிச் சிவலோகத்தை அடைந்தார்.

காரி நாயனர்

மறையாளர் வாழும் திருக்கடவூரில் தோன்றிய காரியா ராகிய இப்பெரியார், வண்டமிழின் துறையான பயன் தெரிந்து சொல் விளங்கிப் பொருள் மறையக் காரிக் கோவையெனத் தமிழ்க்கோவை ஒன்றைத் தம்பெயராற் செய்தமைத்துத் தமிழ்நாட்டு மூவேந்தர்களிடமும் சென்று அவர்கள் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்து அவ்வேந்தர்கள் தந்த பெரும்பொருளைக் கொண்டு சிவ பெருமானுக்குத் திருக்கோயில்கள் பல கட்டுவித்தார். நாட்டுமக்கள் யாவரும் மனமுவக்கும்படி செய்யுட்களுக்குச் சுவை விளங்கப் பொருள் கூறிப் பெற்ற பொருள்களைச் சிவனடியார்களுக்கு அளித்து இறைவன் எழுந்தருளிய திருக்கயிலையை மறவாத சிந்தையராய் வாழ்ந்தார். கடல் சூழ்ந்த உலகெங்கும் தமது புகழை நிலைபெறச் செய்த காரி நாயனுர், சிவனருளால் வாய்ந்த மனம்போல் உடம்பும் வட கயிலைமலை சேர்ந்தார்.