பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/986

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

970

பன்னிரு திருமுறை வரலாறு


வந்து மிகவும் வெகுண்டு அச்சமின்றி இக்கொடுஞ் செய்கையைச் செய்தார் யார்?' என வினவினர். அருகே நின்ற செருத்துணையார், 'இவள் இறைவர்க்குச் சாத்துதற் குரிய மலரை எடுத்து மோந்தமையால் நானே இப்படிச் செய்தேன்' என்ருர். அப்போது கழற்சிங்கர் அவரை நோக்கி, பூவை எடுத்த கையையன்ருே முதலில் தடிதல் வேண்டும்?' என்று சொல்லித் தம் உடைவாளை உருவிப் பட்டத்தரசியின் கையைத் தடிந்தார், இத்தகைய அரிய திருத்தொண்டினைச் செய்த கழற்சிங்க நாயனர் சைவ நெறி தழைத்தோங்க அரசாண்டு சிவபெருமான் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் பெருவாழ்வு பெற்ருள்.

இடங்கழி நாயஞர்

இவர், தில்லையம்பலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்த னுக்கு முன்னேராகச் சோழர் குடியில் தோன்றியவர்; கோனுட்டின் நலைநகராகிய கொடும்பாளுரில் தங்கியிருந்து வேளிர்குலத்து அரசினை ஏற்று ஆட்சிபுரிந்தவர் : சைவ நெறி வைதிகத்தின் தருமநெறியொடு தழைப்பத் திருக் கோயில்கள் எங்கும் வழிபாட்டு அர்ச்சனை விதிப்படி நிகழச்செய்தவர்; சிவனடியார்கள் வேண்டுவனவற்றை விரும்பிக்கொடுப்பவர். இவர் அரசுபுரியும் நாளில் சிவனடியார்க்குத் திருவமுதளிக்கும் தவமுடைய அடியார் ஒருவர், உணவமைத்தற்குரியன எங்கும் கிடைக்காமை யால் மனம் தளர்ந்து அடியாரை அமுதுசெய்வித்தலிலுள்ள பேரார்வத்தால் செய்வதறியாது அரசர்க்குரிய நெற் பண்டாரத்திலே நள்ளிரவிற் புகுந்து நெல்லைக் களவு செய்தார். அந்நிலையிற் காவலர்கள் அவரைப்பிடித்து இடங்கழியார் ஆகிய மன்னர் முன் கொண்டுவந்தார்கள். இடங்கழியார், அவரைப்பார்த்து நீர் ஏன் நம்முடைய நெற்பண்டாரத்தைக் கவர்ந்தீர்’ என வினவினர். அது கேட்ட அடியவர் நான் சிவனடியார்களைத் திருவமுது செய்வித்தற்குப் பொருளில்லாமையால் இவ்வாறு செய்தேன் என்ருர், அதுகேட்டு இரங்கிய இடங்கழி நாயனர் எனக்கு இவரன்ருே பண்டாரம் என்று சொல்லிப்பாராட்டிப் படைத்த நிதிப்பயன் கொள்வாராய், 'சிவனடியார்களெல்லாரும் எனது நெற்பண்டாரம் மாத்திர மன்றி நிதிப்பண்டாரங்களையும் கவர்ந்து கொள்க’ என