பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/992

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

976 பன்னிரு திருமுறை வரலாது

திருக்கோயில்களிற் சிவலிங்கத் திருமேனியைத் தீண்டி அருச்சிப்பவர்கள் ஆதிசைவர்களாகிய முனிவர்கள். முப் பொழுதும் இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலமாகிய எக்காலத்திலும் வழி வழியாகச் சிவபெருமானது அகம்படித் தொண்டில் விரும்பிய வழிபாட்டு அருச்சனைகள் சிவமறை யோர்களுக்கே உரியனவாகும். அப்பெருந்தகையாளர் களின் பெருமை சொல்லாற் புகழ்தற்கு எளியதன்று.

முழுநீறு பூசிய முனிவர்

குலப் பிறப்பிற்கேற்ற தலைமையான அறவொழுக் கத்தை உடையவர்களாய்த் தத்துவ நெறியின நன் குணர்ந்து, நீதி நெறியிற் சிறிதும் தவருதவர்களாய்த் தொன்றுதொட்டு வரும் மும்மலங்களை அறுத்த வாய்மை யையுடைய அரு முனிவர்கள் நியமம் தவருது செய்யும் நித்தியாக்கினியில் விளைத்தெடுத்த திருநீற்றினைப் புதிய பாத்திரத்தில் வைத்துக்கொண்டு சிவபெருமான வணங்கி அவரது திருவருள் வண்ணமாகிய திருநீற்றினை உடல் முழுதும் பூசிக்கொள்வர். இப்பெரியோர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப்போற்றப் பெறும் திருக்கூட்டத் தவராவார்கள்.

இத்திருநீறு கற்பம், அது கற்பம், உபகற்பம் என மூவகைப்படும். கன்றீன்ற பசுவின் சாணத்தைச் சத்தி யோசாத மந்திரத்தினுல் ஏற்றுச் சிவந்திரங்களால் உண் டாக்கப்பட்ட சிவாக்கினியில் இட்டெடுத்த திருதிது கற்பம் எனப்படும். காட்டில் உலர்ந்த பசுச் சாணத்தைக் கொண்டுவந்து கோசலத்தை விட்டுப் பிசைந்து அத்திர மந்திரம் ஓதி உண்டையாகப் பிடித்து ஓமத் தீயில் இட்டுச் சிறப்புற வெந்த நீறு அநுகற்பம் எனப்படும். காட்டில் மரங்கள் பற்றி எரிந்தமையால் வெந்த நீறும் கொட்டில் முதலிய இடவகைகள் தீப்பற்றிக்கொள்ள வெந்த நீறும், செங்கற்களைச் சுட்ட தீயில்ை விளைந்த நீ ஆம் ஆகிய இவற்றை உண்டையாக்கித் திருமடங்களில் விளங்கும் சிவாக்கினியினல் விதிப்படி நீருக்கப்பட்டவை உபகற்ப மெனப்படும். இவ்வாறு அமைந்த திருநீற்றினை இறைவன் முன்னும் தீயின் முன்னும் குரு முன்னும் துய்மையற்ற நிலத்தும் வழிநடக்கும்போதும் அணியாமல் ஓரிடத்து