பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/993

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 9ፕ?

அமைதியாக இருந்து சிந்தாமற் பூசிக்கொள்ளுதல் வேண்டும் என்றும், நீரிற்குழைக்காமல் பொடியாய்ப் பூசுதல், நீரிற் குழைத்துப் பூசுமிடத்து மூன்று கீற்ருகவும் பிறைவடிவமாகவும் முக்கோணமாகவும் வட்டமாகவும் பூசுதல் எனத் திருநீறணியும் திறம் பல வகைப்படும் என்றும் கூறுவர் பெரியோர். உடல் முழுவதும் திருநீறு பூசிய முனிவர்களே முழுநீறு பூசிய முனிவர் எனப் போற்றப்பெறுவர்.

அப்பாலும் அடிச்சார்ந்தார்

சேரசோழ பாண்டியர்களாகிய மூவேந்தர்க்கும் உரிய தமிழ்நாட்டுக்கு அப்பாலுள்ள பிறநாடுகளிற் பிறந்து சிவ பெருமான் திருவடிகளை அடைந்தவர்களும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையிலே போற்றப்பெற்ற சிவனடியார்கள் வாழ்ந்த காலத்துக்கு முன்னும் பின்னும் தோன்றிச் சிவபெருமானுடைய திருவடிகளைச் சார்ந்தவர்களும் அப்பாலும் அடிச்சார்ந்தார் என்னும் திருக்கூட்டத்தினராவர்.

பூசலார் காயர்ை

தொண்டை நாட்டில் திருநின்றவூரிலே மறையவர் குலத்தில் தோன்றியவர் பூசலார் என்னும் பெருந்தகை யார். இவர் சிவனடியாராகிய அன்பர்க்கு ஏற்றபணி செய்தலே பிறவிப்பயன் எனக்கொண்டு பொருள்தேடி அடியார்க்கு அளித்து வந்தார். சிவபெருமானுக்குத் திருக் கோயில் அமைத்துப் பணிசெய்ய விரும்பிய இவர், தம் மிடத்துப் பொருள் இல்லாமையால் அதற்குரிய பொருளை வருந்தித் தேடியும் பெற இயலாதவராயினர். இந்நிலையில் மனத்தினலே சிவபெருமானுக்குத் திருக்கோயில் அமைக்க எண்ணிஞர். மனத்தின்கண் சிறிதுசிறிதாகப் பெரும் பொருள் சேர்த்தார். திருப்பணிக்கு வேண்டிய கல் மரம் முதலிய சாதனங்களையும் பணிசெய்தற்குரிய தச்சர் முதலிய பணியாளர்களையும் தம்மனத்தில் தேடிக் கொண்டார். நல்லநாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம்மனத்தி னுள்ளே தொடங்கி இரவிலும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய

62