பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/995

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 9%

யது ' என்று தமக்குள்ளே சிந்தித்துத் தாம் மனத்தால் முயன்று செய்த திருக்கோயிலின் அமைப்பினை மன்னனுக்கு விளங்க எடுத்துரைத்தார். அரசன் அதிசயித்துப் பூசலாரை நிலமுறத் தாழ்ந்து வணங்கித் தனது நகருக்குச்சென்ருன். பூசலார் நாயனுர் தாம் கட்டிய மனக்கோயிலிலே குறித்த நற்பொழுதில் சிவபெருமானைத் தாபித்துப் பூசனைகள் எல்லாம் பெருஞ்சிறப்புடன் பலநாட்கள் பேணிச் செய்திருந்து சிவபெருமான் திருவடிநீழ லடைந்தார்.

மங்கையர்க்கரசியார்

வரிவளையாள் மானி ' எனத் திருத்தொண்டத் தொகையிற் குறிக்கப்பெற்ற இவ்வம்மையார், வளவர் திருக்குலத்தில் மணிமுடிச் சோழன் மகளாராகத் தோன்றியவர்; செந்தாமரைமலரில் வீற்றிருக்கும் திருமகள் எனத்தகும் பொலிவுடையார் ; பாண்டியர் குலத்துக்கு நேர்ந்த பழியினைத் தீர்த்த தெய்வப்பாவை : திருஞான சம்பந்தப் பிள்ளையார் திருவருளினலே செந்தமிழ்ப் பாண்டி நாட்டின் புறச்சமய இடர் நீக்கித் திருநீற்றினைப் பரவச் செய்தவர் ; புகலி வேந்தராகிய ஆளுடையபிள்ளையார் தூய திருவாக்கிளுல், மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை எனத் திருப்பதிகத்திற் சிறப்பித்துப் பாராட்டப் பெறும் பெருந்தவத்தினையுடையார். பாண்டிமாதேவியா ராகிய இவ்வம்மையார் தம் கணவர் நின்றசீர் நெடுமாற ளுருக்குச் சைவ வழித்துணையாய் நெடுங்காலம் வாழ்ந்து தூயநன்னெறியாகிய சிவநெறியில் நின்று அவரோடுங்கூட ஈசர்திருவடி நிழற்கீழ் அமர்ந்திருக்கும் நற்பேறுபெற்ருர்,

ஆளுடைய பிள்ளையார் தாம்பாடிய மங்கையர்க்கரசி என்னும் முதற்குறிப்புடைய திருவாலவாய்த் திருப்பதி கத்தின் 1, 3, 5, 7, 9-ஆம் திருப்பாடல்களில் மங்கையர்க் கரசியார் திருவாலவாய்ப் பெருமானைப் பணிந்து போற்றிச் சிவநெறி வளர்த்த சீர்த்தியினை உளமுவந்து பாராட்டி யுள்ளமை இங்கு நினைக்கத்தகுவதாகும்.

நேச நாயனுர்

காம்பீலி என்னும் பழம்பதியில் அறுவையர் (சாலியர்) குலத்திலே தோன்றியவர் நேசநாயனர். தங்கள்தொழில்