பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/996

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

980 பன்னிரு திருமுறை வாலனது

மரபில் மேம்பாடுபெற்ற இந்நாயகுச். சிவனடியார் திருவடிகளைச் சென் னியிற் கொண்டு போற்றும் புகழுடை யார். இவர் தம்முடைய மனத்தின் செய்கையைச் சிவபிரா னது திருவடிமலர்க்கு உரியதாக்கி, வாக்கின் செய்கையைத் திருவைந்தெழுத்துக்கு உரியதாக்கி, கைத்தொழிலின் செய்கையைச் சிவனடியார்களுக்கு ஆக்குவாராகி உடை யும் கீளும் கோவணமும் நெய்து, தம்பால்வரும் சிவனடி யார்களுக்கு இடையருது கொடுத்து தாளும் அவ்வடியார் திருவடிகளை இறைஞ்சியேத்தி அரனடிநீழல் சேர்ந்தார்.

இந்நாயனர் அவதரித்த காம்பீலி என்ற ஊர் பல்லாரி ஜில்லாவிலுள்ள காம்பீலி தாலுகாவின் தலைநகரமாகும்.

கோச் செங்கட் சோழநாயனர்

தன்னை அடைக்கலம்புக்க புருவுக்காக அதன் எடைக்குத் தகத் தனது உடம்பினை அரிந்து கொடுத்துத் துலையில் ஏறிய பெருமை வாய்ந்த சிபி மன்னன் தோன்றிய சோழர் குடியினர்க்கு உரிமையுடைய சோழநாட்டிலே காவிரிக்கரையில் சந்திர தீர்த்தத்தின் அருகிற் பெரு மரங்கள் நிறைந்த நீண்ட குளிர்ந்த சோலையொன்றுளது. அதன்கண் வெண்ணுவல் மரத்தடியில் வெளிப்பட்டருளிய சிவலிங்கத் திருமேனியைக் கண்டு பெருந்தவத்தையுடைய வெள்ளை யானை தன் துதிக்கையினுல் நன்னீரைமுகந்து நாள்தோறும் திருமஞ்சனஞ் செய்து மலர்தூவி வழிபாடு செய்தது. அதல்ை அவ்விடத்திற்குத் திரு ஆனைக்கா என்னும் பெயருண்டாயிற்று. அங்கே மெய்யுணர்விற் சிறந்த சிலந்தியொன்று இறைவன் திருமுடிமேல் சருகு முதலியன உதிராவண்ணம் தன் வாயின் நூலினுல் மேற் கட்டி போன்ற அழகிய பந்தர் அமைத்தது. யானை வழி படச் சென்றபோது சிலந்தி வாய்நீர் நூலால் அமைத்த அப்பந்தரினத் தூய்மையற்றதென்று நினைத்துச் சிதைத் தது. அது கண்ட சிலந்தி யானையின் கைசுழன்றமை யாற் பந்தர் சிதைந்ததென்றெண்ணி மீளவும் தன் வாய் நூலால் அழகியபந்தர் செய்தது. அதனை மறுநாளும் யானை அழித்துப் போக்கியது. அதுகண்ட சிலந்தி இறைவர் திருமுடிமேற் சருகுமுதலியன விழாதபடி நான்வருந்தி யிழைத்த நூற்பந்தரை இவ்வாறு அழிப்பதோ ? என வெகுண்டு யானையின் துதிக்கையினுள்ளே புகுத்து