பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/997

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தொண்டர் புராணம் 剑感置

கடித்தது. அந்நிலையில் வருத்தம் பொருத யானை தன் துதிக் கையினை நிலத்தில் மோதி அறைந்து வீழ்ந்திறந்தது. அதன் துதிக்கையினுள்ளே புகுந்து கடித்த சிலந்தியும் உயிர் துறந்தது. ஆனைக்கா இறைவர் அருள்புரியும் நெறி யால் அவ்வெள்ளையானைக்கு வீடுபேறளித்தருளிஞர்.

அக்காலத்திற் சோழ மன்னணுகிய சுபதேவன் என் பான் தன்பட்டத்தரசி கமலவதி என்பவளுடன் திருத் தில்லை சார்ந்து கூத்தப்பெருமானை வழிபட்டிருந்தனன். நெடுங்காலமாக மக்கட் பேறில்லாத அவ்விருவரும் இறை வரை வழிபட்டுப் போற்றிய நிலையில் இறைவர் அவர்கட்கு அருள்புரிந்தார். அதன்பயணுகக் கமலவதி கருவுற்ருள். திருவானைக்காவிற் பெருமானுக்குப் பந்தரிழைத்து வழி பட்ட சிலந்தி சோழன்மனைவி கமலவதியின் கருப்பத்துள் மகவாய்ச் சார்ந்தது. கருமுதிர்ந்து மகப்பெறும் வேளைவந்த போது, இன்னும் ஒருநாழிகை கழித்துக் குழந்தைபிறக்கு மாளுல் இக்குழந்தை மூன்றுலகமும் அரசாளும்’ எனச் சோதிடர்கள் கூறினர்கள். அச்சொற் கேட்ட கமலவதி அவ்வாறு ஒரு நாழிகை கழித்துப் பிள்ளை பிறக்கும்படி என்காலைப் பிணித்துத் தலைகீழாக மேலே தூக்கி நிறுத் துங்கள் என்று சொல்ல, அவ்வாறே செய்தனர். குறித்த வண்ணம் ஒரு நாழிகை கழித்து ஆண் குழந்தை பிறந்தது. கால நீடிப்பால் அக்குழந்தையின் கண்கள் சிவந்திருந் தன. ஈன்ற தாய் அக்குழந்தையைக் கண்டு என் கோச் செங்களுனே' என அருமை தோன்ற அழைத்து உடனே உயிர் நீங்கினுள். மன்னன் தன் குழந்தையைத் தன் உயிரெனக் காத்து வளர்த்து உரிய பருவத்தில் நாடாள் வேந்தனுக மைந்தனுக்கு முடிசூட்டித் தான் தவநெறியைச் சார்ந்து சிவலோகஞ் சார்ந்தான்.

கோச்செங்கட் சோழர், சிவபெருமானது திருவருளி குலே முன்னைப்பிறப்பின் உணர்வொடு பிறந்து சைவத் திருநெறி தழைக்கத் தம் நாட்டில் சிவாலயங்கள் பலவற்றைக் கட்டுந் திருப்பணியினை மேற்கொண்டார்; திருவானைக்காவில் தாம் முன்னைப் பிறப்பில் சிலந்தியாக இருந்து இறைவர் திருமுடிமேல் நூலாற் பந்தரிழைத்து அருள் பெற்ற வரலாற்றினை அறிந்தவராதலால், அங்கு இறைவன் வீற்றிருந்தருளும் ஞானச் சார்புடைய வெண்