பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - - பரிபாடல் மூலமும் உரையும் முருகவேளானவன், தன் தலைக்கண்ணியை அவள் திருத்தமான அடிகளிலே தோயுமாறு திறையாகச் செலுத்தி, அவள் பாதங்களிற் பணிந்தவனாக, அவளுக்குத் திறைகொடுத்து அவளருளை வேண்டி நின்றான். r அவளும், அவனை 'வருந்தாதே’ என்று சொல்லியவளாக, அவன் தழுவிக்கொள்ளும் பொருட்டாகத் தன் மார்பினை அவனுக்கு அளித்தபடி நின்றாள். 'அவள்பால் நெருங்காதே’ என்று, அப்போது கூறியவ ளாக, ஒள்ளிய இழையணிந்த வள்ளிநாயகியானவள், தன் தலைமாலையினையே கைக்கோலமாகப் பற்றி மிகவும் இறுக்க மாக முருகனைக் கட்டிப் பிடித்தாள், தேவானைப் பிராட்டியை யும் அடிக்கத் தொடங்கினாள். - - தம் தலைவியர் மோதிக்கொள்வதைக் கண்டதும், ஒருவரது மயில் மற்றவரது ஒள்ளிய மயிலோடு எதிர்த்துச் சண்டையிடத் தொடங்கியது. இருவரின் சிறந்த கிள்ளைகளும் தம் மழலை மொழிகளால் ஒன்றையொன்று ஏசிக்கொள்ளலாயின. வெறியாடலை ஏற்றுக்கொண்டு அருள்பவனாகிய முருகப் பெருமானின் பரங்குன்றத்துள்ள வள்ளிநாயகிக்கு ஆதரவான வண்டுகள், தேவானைப் பிராட்டியின் செறிந்த கொண்டைமேல் மொய்த்துள்ள வண்டுக்ளின்மேற் சென்று பாய்ந்தன. சொற்பொருள் : ஊழ் முறைமை. தேய் கரை - தேய்ந்து அழியும் கரை. நூக்கி - பேர்த்துத் தள்ளியபடி காழ் - வயிரம். கேழ் - நிறம். மாண் நலம் - சிறந்த அழகுநலம். திருவுடையார் - அழகியரான பெண்கள். அல்கி - தங்கி, நல்கல் - அருளுதல். வைகூர்மை, உழக்கும் - வருந்தும். வெந் நோக்கம் - சுடும் பார்வை; சினத்தால் வெம்மைகொண்டு நோக்கும் நோக்கம்; இதற்கு மாறுபட்டது அருள்நோக்கம். மழைக்கா - மழைக்காக; மழைக்கா எனப் பிரித்து மழையை விரும்பும் சோலை என்பதும் ஆம். யாத்து கட்டி வான் கிறி சிறந்த கிளி; வானத்துப் பறக்குமியல்பினவான கிளிகளும் ஆம். செறி கொண்டை - செறிவான கொண்டை வெறி வெறியயர்தல்; - - விளக்கம் : முருகப்பிரானைத் தேவானைப்பிராட்டி குறை கூறியவற்றைக் கேட்டு, அவன், அவள் அடிகளில் பணிந்து வீழ, அவள் மார்பளித்துநின்றாள்; அதனைக் கண்டதும் வள்ளி நாயகி சினங்கொண்டு, முருகனைத் தழுவவிடாது தானே கட்டிப் பிடித்தபடி, அவளைப் புடைக்கத்தொடங்கினாள் என்க. தன் எதிரேயே மற்றொருத்தியின் பாதங்களிலே தன் கணவன் பணிந்து வீழ்வதை எவள்தான் பொறுத்து நிற்பாள் தேவியர் தம்முட் சண்டையிட, அவருக்குரிய மயில்களும், கிளிகளும் தம்முட்