பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன்- - - - - – 3 அல்லது பாடற்குரிய தெய்வங்களை யொட்டியோ இப் பரிபாடல் தொகுக்கப் பெற்றதாகக் கூறவியலாது. பண்களின் அமைதியை ஒட்டியே இதனை அமைத்துள்ளனர் என்பது மேற்போக்காக இத் தொகைநூலைப் பார்ப்பவருக்கும் விளங்கும். இதன் முதற் பன்னிருபாடல்களும் பாலையாழ்; அடுத்து வரும் ஐந்தும் நோதிரம்; அடுத்து இறுதியாக வரும் நான்கும் காந்தாரம்; இறுதிப்பாடலின் பண் தெரியவில்லை. ஆனால் இந்த வரிசையமைப்பின்படி அதனையும் பண் காந்தாரத்திற்கே உரியதாக்கலாம். ... " - எழுபது பரிபாடல் இனி, இப் LIT5೧೧T அமைத்த இசையாசிரியன்மருள் பத்துப் பாடல்களுக்கு நல்லச்சுதனார் அமைத்துள்ளதாக அறிவதனால், காலத்தால் மறைந்த பரிபாடல்கள் பலவற்றுள்ளும், இசையாசிரியர்களிடம் பரவலாகப் பயின்று வழங்கியவற்றை மட்டுமே அவர்கள் தொகுத்து வழங்கினர் என்று கருதலாம். ஆகவே இந்த இசைமரபினரின் அருளாலேயே நமக்குப் பரிபாடல்கள் கிடைத்தன. விழாக் காலங்களுள் வந்து கூடும் மக்களை இன்புறுத்த, இசையோடு இத்தகைய பாடல்களை அவர்கள் பாடினராதலும் பொருந்தும். - இப் பரிபாடலின் தொகை, தொகுக்கப்பெற்ற காலத்தில் எழுபது ஆகும். இதனை, திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத் தொருபாட்டுக் காடுகிழாட் கொன்று - மருவினிய வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப செய்ய பரிபாடல் திறம். - - என்னும் பழஞ் செய்யுளால் அறியலாம். இவற்றுள், இந்நாளிற் கிடைத்தன. 22-பாடல்களே இரண்டு பாடல்கள் தொல்காப்பிய உரையாசிரியர்களின் மேற்கோட் செய்யுட்களிலிருந்து கிடைத்தன. ஆக, 24 பாடல்களைக் காணுகின்றோம்; சில பாடற் பகுதிகளும் கிடைத்துள்ளன. - - மதுரை பற்றிய நூல் - இவற்றை ஒருங்கேநோக்கும்போது, இப் பரிபாடல்கள் மதுரையையும், மதுரைக்கு வளமும் அழகும் காப்பும் தந்த வையையையும், மதுரையைச் சார்ந்த திருப்பரங்குன்றத்துச் செவ்வேளையும், திருமாலிருங்குன்றத்து நெடுவேளாகிய மாயோ னையும், கொற்றவையையும் பாடுவனவாக அமைந்தன என்பத னைக் காண்கிறோம். தமிழக மருங்கின் எப்புறத்தும் வழங்கிய செய்யுட்களைத் தொகுத்து அமைத்த பிற தொகை நூற்களைப் |