பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் வையை (10) - 111 மேலாகத் தூவிக் களித்தனர் சிலர். விரும்பத்தக்க படகுகளில் அமர்ந்து, விரையச்செல்லும் ஆற்றுநீரோடு அவற்றைச் செலுத்தினர் சிலர். முதற்கண் புனலை எதிர்த்துச் சென்று விரைவாக ஆடியவருட் சிலர், அதனால் உடல்வருத்தம் கொண்டமையால் மெல்ல விளையாடலாயினர். மென்மை வாய்ந்த பாவைப் பருவத்துப் பெண்கள், தாம் கரைக்கண் இழைத்து விளையாடிய சிறுவீடுகளிற் சிறுசோறு சமைத்து, அதனை உண்டு விளையாடினர். அச் சிறுசோற்றை இரந்து நின்றனர் இளைஞருட் சிலர். அவர்க்கு இட்டு மகிழ்வாரும், மறுத்துப் போக்குவாருமாகச், சிற்றிடை மாதரான அவர், விளங்கினர். ஏமாற்றம் பெற்ற மைந்தர்கள். தம்மை ஏமாற்றிய பெண்களின் பந்தையும் கழங்கையும், மற்றும் பல பொருள் களையும் களவாடிக்கொண்டு ஓடினர். அழகிய குளிர்ந்த கரையிடத்து நின்றவாறே அவர்கள் ஆற்று வெள்ளத்துட் பாய்ந்தனர். இவ்வாறு பலரும் ஆடிக்கலக் குதலால், இனிய தன்மை வாய்ந்த புதுப்புண்லும், ஒளிவிளங்கும் வேலோடு வாளும் கைக்கொண்டு, தமக்குட் பகைகொண்டு வீரர்கள் போரிடுவதும், இருதிறத்தாரின் களிறுகளும் தமக்குள் போரிடுவதுமாகத் திகழும் போர்க்களத்தின் தன்மைபோலத் தெளிவின்றிக் கலங்கியிருந்தது. - சொற்பொருள் : தண்டி - விரும்பி. தாய் - தாவி கண்டல் - தாழை. தாது - பூந்தாது. திமில் - மீன் படகு. ஒய்வார் - செலுத்துவார். உழவு - வருத்தம் எஃகு வ்ேல் தீ நீர் - இனிய நீர் மாலை மதியம் - மதிமாலை மாலிருள் கால்சீப்பக் கூடல் வதிமாலை மாறும் தொழிலாற் புதுமாலை நாளணி நீக்கி நகைமாலை பூவேய்ந்து - தோளணி தோடு சுடரிழை நித்திலம் 115 பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் - ஆடுவார் ஆடல் அமர்ந்தசீர்ப் பாணி நல்ல கமழ்தேன் அளிவழக்கம் எல்லாரும் பண்தொடர்வண்டு பரியஎதிர் வந்துதக் கொண்டிய வண்டு, கதுப்பின் குரலூதத் 120 தென்திசை நோக்கித் திரிதர்வாய் மண்டுகால் சார்வா நளர்மலைப் பூங்கொடி தங்குபு உகக்கும் - பனிவளர் ஆவியும்ரேன்ம் மணிமாடத்து உண்ணின்று தூய பனிநீ ருடன்கலந்து கால்திரிய ஆர்க்கும் புகை; - 125 மாலைப் பொழுதிலே நிறைந்த மயக்கந்தரும் இருளைத் தோன்றிய மதியமானது போக்கிற்று. மதுரைவாழ் மக்களும்