பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' புலியூர்க்கேசிகன் வையை (11) 113 . மக்கள் நீர்வளமற்று வருத்தமுறாதபடி வருகின்றது புதுப்புனல் அதன்கண் மக்கள் விருந்தயர்ந்து இன்புறுகின்றனர். இத்தகைய சிறப்புடைய கூடற்பேரூரானது, குற்றமறச் சொல்லப் படும் புகழையுடையவரான பாண்டியருக்கு உரிமையுடைய தாகும். அவரும் தம்மோடு ஒருசேர் விருப்பங்கொண்டு விளங்கும் ஆயத்தோடு பேர்ந்து, வையையின் புகழைப் போற்றித் தொழுதனர். இவ்வாறு மக்களும் மன்னனும் போற்றச் செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயாதிருப்பதாக என்பதாம். சொற்பொருள் : இலம்பாடு - வறுமை. புலவர் அறிவாற் றல் உடையோர், புகழ் பாடுவார். ஞெமர நிறைய. இறை தலைமை, பொலம் பொன். அருங் கறை கறை. அருகும் குற்றம் நீங்கும். இசை புகழ்.வயிரியர் - பாண்டியர். - - விளக்கம் : இவ்வாறு நிகழ்ந்த புதுப்புனல் விழவினைப் பற்றிக் கூறினாள். இதனைக் கேட்டலுறுவானாகிய தலைவன், தன் பிழையை உணர்ந்து, தலைவிபால் மீள்தற்கு முற்படுவான் என்பதனால் ஆம் தலைவி வருத்தமற்றதாகவோ, அன்றி அவனை வேண்டுவதாகவோ ஏதும் சொல்லப்பட்ாத பண்பாட்டினையும் கவனிக்க r பதினோராம் பர்டல் வையை (11) பாடியவர் : நல்லந்துவனார்; பண் வகுத்தவர் : நாகனார்; பண் : பாலையாழ். - தலைவி ஒருவனை விரும்பினாள்; அவனுக்கே அவளை மணஞ்செய்து தருவதற்கு அவளுடைய பெற்றோரும் இசைந் தனர். மகிழ்ச்சியான இச்செய்தியை அத் தலைவனுக்கு அறிவிக்க நினைக்கின்றாள், தோழி. வையைப் புதுப்புனலில் நீராடி மகிழ விரும்பிக் கரையில் ஒருசார் நின்ற அவனை அத் தோழி கண்டாள். அவன் கேட்டறியுமாறு, வையையை நோக்கி அவள் பாடுவதாக அமைந்த பாடல் இது. இதன்கண், வையை யாற்றில் தைந்நோன்பு பூண்டு நீராடியதன் நோன்புப் பயனாகவே, அவள் தான் விரும்பியவனையே கண்வனாக அடைந்தாள்' எனத் தோழி கூறுவது சிறப்பாகும். - - வந்தடைந்த புதுப் புனல்! விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்பு: எரிசடை எழில்வேழம் தலையெனக் கீழிருந்து தெருவிடைப் படுத்தமூன்று ஒன்பதிற் றிருக்கையுள் உருகெழு வெள்ளிவந் தேற்றியல் சேர; | | |