பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பரிபாடல் மூலமும் உரையும் வருடையைப் படிமகன் வாய்ப்பப்; பொருள்தெரி 5 புந்தி மிதுனம் பொருந்தப்; புலர்விடியல் அங்கி உயர்நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்குப் பாலெய்த ; இறையமன் வில்லிற் கண்டமகரம் மேவப்; பாம்பொல்லை - மதியம் மறைய வருநாளில்,வாய்ந்த 10 பொதியின் முனிவன் புரைவரைக் கீறி மிதுனம் அடைய விரிகதிர் வேனில் - எதிர்வரவு மாரி இயைகென ; இவ்வாற்றான் புரைகெழு சையம் பொழிம்ழை தாழ நெரிதரூஉம் வையைப் புனல்; - 15 விரிகதிர்களையுடைய மதியத்தோடு அகன்ற வானத்துக் கண்ணே ஒன்றுபடுத்திச் சேர்ப்பதன் பொருட்டாக, எரி போன்ற சடையினையுடையவனாகிய அழகிய களிறுபோன்ற சிவ பெருமான் தலைமை கொள்ள, அவனுக்குக் கீழாக அமர்ந் திருந்து அறங்கேட்டமுனிவர்கள், வீதிகளாகப் பகுத்தமைத்தவை மூன்றாகும். அம் மூன்று வீதிகளும் ஒவ்வொன்றினும் ஒன்பது நட்சத்திரங்களின் இருக்கைகளைப் பொருந்தியவாகப் பணி ரெண்டு இராசிகளாக விளங்கும். அவற்றுள், நிறம் பொருந்திய வெள்ளி என்னும் சுக்கிரன் ஏற்றின் தன்மை கொண்ட இடபராசியினை அடைந்தான். செவ்வாய் மேடத்திற் சேர்ந்திருந் தான். பனுவற் பொருள்களை உணர்கின்ற ஞானவானாகிய புதன் மிதுனத்தில் பொருந்தினான். புலர்கின்ற விடியற்காலைக்கு உரியோனாகிய சூரியன் தனக்குரிய வீடாகிய சிம்மத்திற்கு மேல் வீடாகிய கடகராசியில் நின்றான்; அந்தணனாகிய குருவானவன் சனியின் மகர வீட்டிற்கு அடுத்த வீடாகிய கும்பத்திற்குப் பக்கத்து வீடாகிய மீனத்தை அடைந்தான். அனைவருயிரையும் போக்கும் எமனாகிய (விதி) சனியானவன், தனுசுக்கு அடுத்ததாகிய மகரத்தில் பொருந்தி யிருந்தான். ராகுவாகிய பாம்பானவன் விரையச் சென்று சந்திரனை மறைத்தபடி மகரத்தில் நின்றான். இவ்வாறு கோள்கள் பொருந்தி வந்த பெளர்ணமி நாளாகிய (உத்தராட நட்சத்திரம்) அந்நாளிலே பொதியில் முனிவனுக்கு உரியதான உயர்ச்சிபொருந்திய மலையினைக் கடந்து காற்றும் தென்கிழக்குத் திசையைச் சார்ந்து வரலாயிற்று. சூரியனின் கதிர்கள் விரிந்து வெம்மை செய்துவந்த வேனிற்காலத்தினை வெல்லும் பொருட்டாக, எதிரிட்டு வருகின்ற கார்காலமானது வந்து பொருந்துக என்னும் தன்மையும் உண்டாயிற்று. இக் காரணங்களால், உயர்ச்சி பொருந்திய மலைப்பகுதியிடத்தே பெருமழையும் பெய்தது. அதனால் வையை யாற்றினும் புதுப் புனல், எதிர்ப்பட்டதை அழித்ததாய் முறைமையோடு வருவதா யிற்று. -