பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பரிபாடல் மூலமும் உரையும் தசைந்து அடிமேல் அடிவைத்து நடந்து தன்தொடிவிளங்கும் முன்னங் கை அழகுடன் விளங்குமாறு வளைத்துத் தன் தலைக் கண்ணியைத் திருத்தியமைத்தாள். அத்தகைய நேரிய சந்தினைக் கொண்ட முன்னங்கையினை உடையவளான அவளையும், அவளின் கண்வனையும் அதோ காணுங்கள் என்று கூறிக் காட்டினர் சிலர். சொற்பொருள் : சுடுநீர் சுடும் தன்மையுடைய பொன்; வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை குழை - குண்டலம், ஞால - தொங்க கடி - புதிய பிண்டி - அசோகம். விடுமலர் - கட்டவிழ்ந்த மலர் விடுபூ என்பர். தொடி வளை. காரிகையாக - அழகாக. இறை - சந்து. விளக்கம் : அவள் அணிதிருத்தி நின்றாள் என்றது, தன் காதற்பெருக்கைத் தன் கணவனுக்குப் புலப்படச் செய்வதற் கென்று கொள்ளுக. - 啤 - - சேறுபட்ட கரை துகில்சேர் மலர்போல் மணிநீர் நிறைந்தன்று புனலென மூதூர் மலிந்தன்று அவருரை, உரையின் உயர்ந்தன்று கவின், 95 போரேற் றன்று நவின்று; தகர மார்பழி சாந்தின் மணலளறு பட்டன்று; துகில்பொசி புனலின் கரைகார் ஏற்றன்று; - விசும்புகடி விட்டன்று விழவுப் புன லாங்க : துகிலிற் பொருந்திய பூத்தொழில் வேலைப்பாடுகளைப் போல, நீலநிறத்து வையை நீரினும் பூக்கள் நிறைந்திருந்தன. அதன்கண் வெள்ளம் நிறைந்தாற்போல நீராடுவோரின் வையை பற்றிய பேச்சுக்கள் மதுரையெங்கும் நிறைந்தன. அப் பேச்சுக் களினும், அதன்கண் நீராடியோர் பெற்ற புத்தழகு உயர் வுடையாகத் திகழ்ந்தது. அந்தப் புத்தழகு பிற அழகுகளுடன் போட்டியிட்டு நின்றது. மகளிர் மார்பினின்றும் வழிந்த தகரச் சாந்தால் கரையிடத்து மணல் சேறுபட்டது. நீராடிக் கரையேறி நின்றவரின் ஆடைகளிலிருந்து சிந்திய நீரால், கரைப்பகுதி, மழையினைப்பெற்ற இடத்தைப்போல விளங்கியது. இவ்வா றாகிய சிறப்பின் காரணமாகப், புதுப்புனல் விழாவின் உயர்வுக்கு எதிராக, வானகமும் தன் சிறப்பை இழந்ததுபோலத் தோன்றிற்று. சொற்பொருள் : துகில் சேர் மலர்-துகிலிடத்துப் பொருந்திய பூவேலைப் பாடுகள். மணி - நீலமணி, மணிநீர் - நீலமணியின் நிறத்தைப் பெற்று விளங்கும் தெளிந்த நீர். அவர் நீராடுவோரும், ஆடச்செல்வோரும், ஆடித் திரும்புவோருமாகிய மக்கள். உரை - பேச்சு நவின்று மிக்கு தகரம் ஒரு வகை மணப்பொருள். அளறு - சேறு. கடி - சிறப்புத் தன்மை. ஆங்க': அசை -