பக்கம்:பரிபாடல்-அகமும் புறமும்-மூலமும் உரையும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்கேசிகன் : ഞഖണ്ഡ (12) 135 - மல்லிகை, முல்லை, மணங்கமழும் சண்பகம், அல்லி, செங்கழுநீர், தாமரை, செவ்வல்லி, வெட்சி, மகிழம், குறுக்கத்தி, பாதிரி, நல்ல கொத்தாகப் பூத்துள்ள நாகம், நறவம், சுரபுன்னை என்னும் எல்லாவகையன மலர்களின் மணமும் வையைக் கரையின் இருமருங்கும் கமழ்ந்து கொண்டிருந்தன. அவ்விரு கரைகளுக்கும் இடையே ஒடும் ஆற்றுவெள்ளம் முதற்கண் கலங்கலாக விளங்கிப் பின்னர் மிகத்தெளிந்ததாய் ஓடியது. செறிவான இருளையுடையதும் மயக்கந்தருவதுமான மாலைப் பொழுதிலே, பரந்த கல்லணைக்குள் தேங்கி நின்ற நீரானது, தன்னிடத்தே சுவர்க்கத்தின் அழகினை நிழலிட்டுக் காட்டியபடி விளங்கியது. போரிடத்துப் பகைவரைக் கொன்று வெற்றிவாகை சூடும் படைப் பெருக்கை உடையவன் பாண்டியன். அவனுக்கு உரியதான வையையாறு, மீளவும் மேகங்கள் மழைபொழிந்து தெளிவாந் தன்மையுள்ள நீரினது செவ்வியை அழிக்கின்ற காலைப் பொழுதிலே, மீளவும் சிவந்த குருதியின் தன்மையைப் பெற்றதாய்க் கலங்கலாக விளங்கிற்று. சொற்பொருள் : மெளவல்-முல்லை.ஆம்பல்-செவ்வல்லி குல்லை - வெட்சி, வகுளம் - மகிழ். குருக்கத்தி - மாதவி. கலிழ கலங்கி விளங்க தேறித் தெளிந்து மிகத்தெளிந்து செறியிருள் அடர்ந்த இருள். மான் மாலை - மயக்கந்தரும் மாலைப் பொழுது. துறக்கம் மேலுலகம். எழில் அதன் அழகு நிழற்காட்டும் நிழலிட்டுக் காட்டும். கார் - மேகம், இரவின் இருளும் ஆம்: அப்போது காரடு காலை என்பதற்கு இருளை அழிக்கின்ற காலைப்போது என்று கொள்ளுக. - - விளக்கம் : போரடு தானை யானைக்குரிய ஆற்றுப் பரப்புத்தான் காரடு கால்ையிற் செங்குருதிக் களம்போல ஆயிற்று 6ᎢᎶöᎢē. . - - - - அவரைக் காண்மின்! சுடுநீர் வினைக்குழையின் ஞாலச் சிவந்த கடிமலர்ப் பிண்டி தன் காதிற் செரீஇ - விடுமலர்ப் பூங்கொடி போல நுடங்கி . அடிமேல் அடிமேல் ஒதுங்கித் தொடிமுன்கைக் 90 காரிகை யாகத்தன்கண்ணி திருத்தினாள் - நேரிறை முன்கை நல்லவள்கேள் காண்மின் 'கொன்னைச் சுட்டுச் செய்யப்பெற்ற கைவினைத் திறனை யுடைய செம்பொன் குழையினும், மிகச்சிவந்த மனமலரைக் கொண்ட அசோகினது புதுமலர்களை ஒருத்தி தன் காதில் தொங்கும் குழையாகச் செருகிக் கொண்டாள். கட்டவிழ்ந்த மலர்களைக் கொண்ட ஒரு பூங்கொடியைப் போல அசைந்